IND vs SL Asia Cup 2023 Final LIVE: 8வது முறையாக சாம்பியன்... 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா..!

India vs Sri Lanka Final Asia Cup 2023 LIVE: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 17 Sep 2023 06:08 PM
8வது முறையாக சாம்பியன்... 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா..!

இலங்கை அணி நிர்ணயித்த 51 ரன்கள் இலக்கை 6.1 ஓவர்களில் எட்டி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: 51 ரன்கள் இலககை நோக்கி களமிறங்கிய இந்தியா..!

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

50 ரன்களுக்கு ஆல் அவுட்.. இலங்கையை மிரட்டிவிட்ட இந்திய பவுலிங்..!

இந்திய அணியின் அபார பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

50 ரன்களுக்கு ஆல் அவுட்.. இலங்கையை மிரட்டிவிட்ட இந்திய பவுலிங்..!

இந்திய அணியின் அபார பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: 50 ரன்களை எட்டிய இலங்கை..!

8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் இலங்கை அணி 15வது ஓவரில் 50 ரன்களை எட்டியுள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: 7 விக்கெட்டை இழந்த இலங்கை..!

இலங்கை அணி தனது 7வது விக்கெட்டை இழந்துள்ளது. இந்த விக்கெட்டையும் சிராஜ் கைப்பற்றியுள்ளார். 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: 5வது விக்கெடை கைப்பற்றிய முகமது சிராஜ்..!

முகமது சிராஜ் தனது 5வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். போட்டியின் 6வது ஓவரில் 5வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: மூன்றாவது விக்கெட்டை இழந்த இலங்கை..!

போட்டியின் 4வது ஓவரின் மூன்றாவது பந்தில் இலங்கை அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்துள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: இலங்கையின் இரண்டாவது விக்கெட் காலி..!

இலங்கை அணி போட்டியின் 4வது ஓவரின் முதல் பந்தில் தனது இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது. இம்முறை முகமது சிராஜ் ஓவரில் பதும் நிஷ்கண்ணா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: அமர்க்களப்படுத்திய முகமது சிராஜ்..!

போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ் அதனை மெய்டனாக வீசியுள்ளார். 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: முதல் ஓவர்.. முதல் விக்கெட்..!

இலங்கை அணி தனது முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான குசல் பெரேரா விக்கெட்டை பும்ரா பந்து வீச்சில் இழந்துள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: தொடங்கியது ஆட்டம்..!

இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி களமிறங்கியுள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: களமிறங்க கேப்டன்கள் சம்மதம்..!

இரு அணிகளின் கேப்டன்களும் போட்டியைத் துவங்க ஒப்புக்கொண்டதால், போட்டி 3.40 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: மழையால் ஆட்டம் தாமதம்.. எடுபடுமா இந்திய பந்து வீச்சு.. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு..!

போட்டியில் டாஸ் மட்டும் போடப்பட்டுள்ள நிலையில், மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் போட்டி தொடங்குவதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: டாஸ் வென்றது இலங்கை..!

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

IND vs SL Asia Cup 2023 Final LIVE: இன்னும் சற்று நேரத்தில் இறுதிப் போட்டி..!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. 

Background

ஆசிய கோப்பை 2023 மூலம் இந்திய அணி 10 முறையாகவும், இலங்கை அணி 12வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 7 முறை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக இந்திய அணி 4 முறையும், இலங்கை அணி 3 முறையும் கோப்பைகளை வென்றுள்ளது. 


இம்முறை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 8வது முறையாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இந்தநிலையில் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி மோதலில் இந்திய அணி வெற்றிபெற்று 5வது முறையாக பட்டத்தை வென்றது. 


கடந்த 2010ல் நடந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் வெறும் 15 ரன்களில் வெளியேற, தினேஷ் கார்த்திக் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


அதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 28 ரன்களும், கேப்டன் எம்.எஸ்.தோனி 38 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். பின்னர் உள்ளே வந்த தற்போதையை ரோஹித் சர்மா 52 பந்துகளில் 41 ரன்கள் குவிக்க,  இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 9 பவுண்டரிகளின் உதவியுடன் 66 ரன்கள் குவித்திருந்தார். 


தடுமாறிய இலங்கை: 


269 ரன்களை துரத்த வந்த இலங்கை அணி 44.4 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சாமர கபுகெதர 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை போராடினார். இருப்பினும், சாமரவின் இன்னிங்ஸால் அணிக்கு வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை. இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததே அந்த அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம். இலங்கை அணி முதல் ஓவரிலேயே நட்சத்திர வீரர் திலகரத்ன தில்ஷன் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 


அவரை தொடர்ந்து இலங்கை அணி 51 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கபுகெதர மட்டும் 55 ரன்களுடன் போராடி வந்தநிலையில், அவருக்கு யாரும் சப்போர்ட்டாக இல்லாததால் இலங்கை அணி 187 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. 


பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி: 


இப்போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா 9 ஓவர்களில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர ஜாகீர் கான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களும், பிரவீன் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 


இன்றைய போட்டியில் மழை இருக்கா..?


கொழும்பில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். இதைத் தொடர்ந்து மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி மற்றும் 10 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி திட்டமிட்ட நேரத்தில் இருந்து தாமதமாக தொடங்கலாம் என நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டைட்டில் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்-4 சுற்று போட்டிக்கு ரிசர்வ் டே வைக்கப்பட்டது. அதேநேரம், இந்த இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.