India vs Pakistan Score LIVE: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா.. 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி..!

IND vs PAK Asia Cup 2023 LIVE: ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

சுதர்சன் Last Updated: 11 Sep 2023 11:10 PM
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா.. 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி..!

குல்தீப் யாதவ் சுழலில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

4வது விக்கெட்டையும் பறிகொடுத்த பாகிஸ்தான்.. பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா

பாகிஸ்தான் அணியின் பக்கர் ஜமான் குல்தீப் யாதவ் பந்தில் போல்டானாதால் பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

15 ஓவர்களுக்கு 65 ரன்கள்.. பார்ட்னர்ஷிப் அமைக்கும் ஜமான் - சல்மான்..!

பாகிஸ்தான் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களுடன் ஆடி வருகிறது. பக்கர் ஜமான் - சல்மான் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகின்றனர்.

2 ரன்களில் அவுட்டாகிய முகமது ரிஸ்வான்.. தடுமாறும் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் 2 ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். 

மீண்டும் தொடங்கியது ஆட்டம்.. விக்கெட் வேட்டையை நடத்துமா இந்தியா..?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

நின்றது மழை..! தயாராகும் மைதானம்..! இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடக்கம்..?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், மழை நின்றதால் இன்னும் சற்று நேரத்தில் போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறுக்கிட்ட மழை... தடுமாறும் பாகிஸ்தான்.. பாதியில் ஆட்டம் நிறுத்தம்..!

இந்திய அணி சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருக்கும் சூழலில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

குறுக்கிட்ட மழை... தடுமாறும் பாகிஸ்தான்.. பாதியில் ஆட்டம் நிறுத்தம்..!

இந்திய அணி சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருக்கும் சூழலில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 

ஹர்திக் பாண்ட்யா பந்தில் போல்டான பாபர்.. பாகிஸ்தான் தடுமாற்றம்..!

பாகிஸ்தான் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான பாபர் அசாம் 24 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் போல்டானார். 

நிதானம் காட்டும் பாகிஸ்தான்.. 10 ஓவர்களில் 43 ரன்கள்..!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் - பக்கர் ஜமான் ஜோடி நிதானமாக ஆடி வருகிறது. அவர்கள் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்துள்ளனர். 

முதல் விக்கெட்டை பறிகொடுத்தது பாகிஸ்தான்.. பும்ரா அசத்தல்..!

பும்ரா வீசிய பந்தில் இமாம் உல் ஹக் 9 ரன்களில் அவுட்டானார். 

இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான்.. பவுலிங்கிலும் பட்டையை கிளப்புமா இந்தியா..?

357 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பக்கர் ஜமான் - இமாம் உல் ஹக் ஜோடி களமிறங்கியுள்ளது. 

357 ரன்கள் டார்கெட்.. பாகிஸ்தானை வதம் செய்த கோலி, கே.எல்.ராகுல்...!

பாகிஸ்தான் அணிக்கு 356 ரன்களை இந்தியா நிர்ணயித்துள்ளது. விராட்கோலி 122 ரன்களையும், கே.எல்.ராகுல் 111 ரன்களையும் விளாசினர். 

13 ஆயிரம் ரன்களை எட்டிய விராட் கோலி சதம்..!

விராட்கோலி இந்த போட்டியில் 99 ரன்களை எட்டியபோது 13 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்று சாதனையை படைத்தார். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த கே.எல்.ராகுல் அபார சதம்..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு வந்த கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் விளாசி அசத்தியுள்ளார். 

300 ரன்களை கடந்தது இந்தியா.. ரன் வேட்டையில் துரிதம்..!

இந்திய அணியின் விராட்கோலி - கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக ஆடியதால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது. 

அரைசதம் விளாசிய கோலி.. டாப் 4 வீரர்களும் ஃபிப்டி..!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார். இந்திய அணியின் டாப் 4 வீரர்களும் அரைசதம் விளாசினர். 

37 ஓவர்களில் 237 ரன்கள்..

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்துள்ளது. 

காயம் காரணமாக களமிறங்காத ஹாரிஸ் ராஃப்..!

காயம் காரணமாக ஹாரிஸ் ராஃப் ரிசர்வ் டே-வான இன்றைய போட்டியில் களமிறக்கப்படவில்லை. 

அரைசதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 200 ரன்களை கடந்த இந்தியா. !

இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ள கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார். 

மீண்டும் தொடங்கியது ஆட்டம்... அதிரடி காட்டுமா இந்தியா..?

இந்தியா - பாகிஸ்தான் அணிமீண்டும் தொடங்கியுள்ளது. 

ரிசர்வ் டேவிலும் தொடரும் மழை.. மிதக்கும் கொழும்பு மைதானம்..!

ரிசர்வ் டேவான இன்றும் கொழும்புவில் மழை பெய்து வருவதால் இன்று போட்டி நடக்குமா? நடக்காதா? என்று கேள்வி எழும்பியுள்ளது.

விடாமல் பெய்யும் மழை.. ரிசர்வ் டேவான நாளை மீண்டும் போட்டி..!

விடாமல் மழை பெய்து வருவதால் ரிசர்வ் டேவான நாளை போட்டி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் தொடங்கிய மழை.. மூடப்பட்ட மைதானம்.. விரக்தியில் ரசிகர்கள்..!

போட்டி தொடங்குவதற்கு தயாராகிய நிலையில் மீண்டும் மழை பெய்வதால் தார்ப்பாய் கொண்டு மைதானம் மூடப்பட்டுள்ளது. 

இன்னும் சற்று நேரத்தில் மைதானத்தில் அம்பயர்கள் மீண்டும் ஆய்வு..! போட்டி நடக்குமா? நடக்காதா?

8.30 மணிக்கு மீண்டும் மைதானத்தை அம்பயர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். 

இன்னும் சற்று நேரத்தில் மைதானத்தில் அம்பயர்கள் மீண்டும் ஆய்வு..! போட்டி நடக்குமா? நடக்காதா?

8.30 மணிக்கு மீண்டும் மைதானத்தை அம்பயர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். 

தயார் நிலையில் மைதானம்..! இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறதா இந்தியா - பாகிஸ்தான் மோதல்?

மழையால் நின்று அம்பயர்கள் மைதானத்தை ஆய்வு செய்துள்ளதால் இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் தொடங்கப்படும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. 

வழிவிட்ட வருணபகவான்.. ஆனாலும் அவுட்ஃபீல்ட் ஈரம்..! ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..!

இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது குறுக்கிட்ட மழை நின்றாலும், அவுட்ஃபீல்ட் இன்னும் ஈரமாக இருப்பதால் ஆட்டம் தொடங்க தாமதமாக உள்ளது.

குறுக்கே வந்த மழை.. பாதியிலே நிறுத்தப்பட்ட ஆட்டம்..! ரசிகர்கள் சோகம்..!

இந்தியா - பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. 

குறுக்கே வந்த மழை.. பாதியிலே நிறுத்தப்பட்ட ஆட்டம்..! ரசிகர்கள் சோகம்..!

இந்தியா - பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. 

ரோகித்சர்மாவை தொடர்ந்து சுப்மன்கில்கில் அவுட்..! நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த கே.எல்.ராகுல்..!

ரோகித்சர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சிக்ஸர், பவுண்டரி விளாசிய ரோகித்சர்மா அவுட்..!

இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் ரோகித்சர்மா 56 ரன்கள் விளாசிய நிலையில் ஷதாப்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

சுப்மன்கில்லைத் தொடர்ந்து ரோகித்சர்மாவும் அரைசதம்.. எல்லைகளுக்கு பறக்கும் பந்து..!

சுப்மன்கில் அரைசதம் விளாசிய நிலையில், கேப்டன் ரோகித்சர்மாவும் அரைசதம் விளாசினார். 

அதிரடி அரைசதம் விளாசிய சுப்மன்கில்.. சிக்ஸர், போர் விளாசும் ரோகித்..!

பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்து ஆடி வரும் சுப்மன்கில் அபாரமாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார். அவர் 37 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் ரோகித்சர்மாவும் அதிரடியாக ஆடி வருகிறார். 

50 ரன்களை கடந்த இந்தியா... அதிரடி காட்டும் சுப்மன்கில்..!

பாகிஸ்தான் பந்துவீச்சை சுப்மன்கில் விளாசி வரும் நிலையில், ரோகித்சர்மா அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதால் இந்திய அணி 50 ரன்களை கடந்துள்ளது. 

பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கும் கில் - ரோகித் ஜோடி..!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரோகித்சர்மா - சுப்மன்கில் ஜோடி அதிரடியாக ஆடி வருகின்றனர். 

பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கும் கில் - ரோகித் ஜோடி..!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரோகித்சர்மா - சுப்மன்கில் ஜோடி அதிரடியாக ஆடி வருகின்றனர். 

Background

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.


ஆசியக்கோப்பை தொடர்:


6 நாடுகள் பங்கேற்ற ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று மீண்டும் மோதி வருகின்றன.


இந்தியா - பாகிஸ்தான் போட்டி:


கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.


சவால்களை தகர்க்குமா இந்தியா ? 


லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கோலி மற்றும் ரோகித் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இந்த இருவரின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேநேரம், கடந்த போட்டியில் பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட, நடுகள வீரர்களான இஷான் கிஷன் மற்றும் பாண்ட்யா நம்பிக்கை அளிக்கின்றனர். இன்றைய போட்டியில் கே.எல். ராகுல் களமிறங்கியுள்ளார். பந்துவீச்சை பொருத்தமட்டில் பும்ரா, சிராஜ், தாக்கூர் ஆகியோருடன் ஆல்ரவுண்டர் பாண்ட்யா ஆகியோரையே இந்திய அணி மலைபோல நம்பியுள்ளது. சுழற்பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் குல்தீப் வலுசேர்க்கின்றனர். நடப்பு தொடரில் இதுவரை நேபாள அணிக்கு எதிராக மட்டுமே இந்திய அணி பந்துவீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா அணி:


ரோஹித் சர்மா, சுப்மான் கில், இஷான் கிஷான், விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


பாகிஸ்தான் அணி:


ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் , முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், பகீம் அஷ்ரப்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.