நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி கைபற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்றபோது தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.


இந்த டி20 தொடர் பொறுத்தவரை ரசிகர்களுக்கு பெரியளவில் விருந்தாக அமையவில்லை என்றே கூறலாம். குறிப்பாக, கடந்த டி20 போட்டியில் 101 ரன்கள் இலக்கை இந்திய அணி 1 பந்து மீதம் வைத்து எட்டியபோது ரசிகர்கள் மிகுந்த வெறுப்பாகினர் என்பதே உண்மை. இதனால், இந்த போட்டியில் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.




கடந்த சில டி20 போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் இஷான் கிஷான் இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். சுப்மன்கில் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பலமாகும். ராகுல் திரிபாதி சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் வெற்றி பெற வைத்த சூர்யகுமார் யாதவ் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.


தொடரை கைப்பற்றும் போட்டி என்பதால் நியூசிலாந்து அணியும் முழு பலத்துடன் களமிறங்கும். அந்த அணிக்கு பேட்டிங்கில் பலமாக கான்வே, மிட்செல் விளங்குகின்றனர். இவர்களுடன்  ஆலன், சாப்மன், பிலிப்ஸ் நன்றாக பேட் செய்ய வேண்டியது அவசியம்.




இந்திய அணியில் உம்ரான்மாலிக், ஷிவம்மாவி, அர்ஷ்தீப்சிங் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். நியூசிலாந்தில் சான்ட்னர், ப்ராஸ்வெல், பெர்குசன், டிக்னெர், சோதி இந்திய அணிக்கு பந்துவீச்சில் குடைச்சல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணி 2023ம் ஆண்டை இனிதாக தொடங்கியிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குவார்கள். இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.


ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை வென்று வெற்றியுடன் நாடு திரும்ப நியூசிலாந்து அணியும் ஆவலுடன் களமிறங்கும். கடந்த போட்டியில் ஆடுகளம் மிகவும் சொதப்பலாக இருந்ததால், இந்த போட்டியில் ஆடுகளம் நன்றாக அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.


மேலும் படிக்க:T20-இல் தொடர்ந்து சொதப்பல்.. இஷான் கிஷனின் மோசமான ஸ்கோர்களை லைக் செய்த நிதிஷ் ராணா!


மேலும் படிக்க: Pakistan Online Coach: ஆஹா! இது என்ன புதுமை.. பாகிஸ்தான் அணிக்கு ஆன்லைன் பயிற்சியாளர்.. வரலாற்றில் இதுவே முதல்முறை!