வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரத்தில் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 13வது போட்டியில் இந்தியா – பாகிதஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி சில்ஹெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஷபாலி வர்மா, மேக்னா சிங் இடம்பெறவில்லை. 






நடப்புத் தொடரைப் பொறுத்தவரையில் இந்திய அணி இதுவரை தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதனால், இந்திய அணி இன்றைய போட்டியில் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கும். பாகிஸ்தான் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து அணியிடம் ஒரு பந்து மீதம் வைத்து தோல்வியடைந்தது. இதனால், பாகிஸ்தான் வீராங்கனைகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.


கேப்டன் ஹர்மன்பிரீத்கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா, மேக்னா,  தீப்தி ஷர்மா, ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் பேட்டிங்கில் முக்கிய வீராங்கனையாக உள்ளனர். இவர்களில் யாரேனும் மூன்று பேர் சிறப்பாக ஆடினாலும் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டும். பந்துவீச்சில் ஹேமலதா, பூஜா வஸ்தரகர், ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பலாம்.


தாய்லாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அமீன் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.





கேப்டன் மரூப் உள்ளிட்ட மற்ற வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  நிடாதர், நஸ்ரா சந்து, துபா ஹாசன், சோஹாலி சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


மேலும் படிக்க: T20 World Cup 2022: டி20 உலகக்கோப்பைக்கு முன் மேற்கு ஆஸ்திரேலியாவுடன் 2 பயிற்சி போட்டியில் களமிறங்கும் இந்தி்யா


மேலும் படிக்க : Womens Asia Cup 2022: அறிமுகப்போட்டியிலே ஹாட்ரிக் விக்கெட்டுகள்..! வங்காளதேச வீராங்கனை சாதனை...!