மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்காளதேத்தில் நடைபெற்று வருகிறது. சில்ஹெட் மைதானத்தில் இன்று வங்காளதேசம் – மலேசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்காளதேச அணிக்காக பரீஹா திரிஸ்னா என்ற இளம் வீராங்கனை அறிமுகம் ஆனார்.
130 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மலேசிய அணிக்கு பரீஹா திரிஸ்னா சிம்மசொப்பனமாக விளங்கினார். அவர் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் 13 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த மலேசிய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவரது பந்துவீச்சில் மலேசிய கேப்டனும், தொடக்க வீராங்கனையுமாகிய வினிபைர்ட் துரைசிங்கம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மாஸ் எலிசா தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட்டாகினார்.
அதற்கு அடுத்த பந்திலே மஹிரா இசாதி இஸ்மாயிலும் முதல் பந்திலே டக் அவுட்டானார். இதன்மூலம் வங்காளதேச அணிக்காக டி20 அறிமுகப் போட்டியிலே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், வங்காளதேச அணிக்காக இதுவரை டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே வீராங்கனை என்ற பெருமையும் பரீஹா திரிஸ்னா பெற்றுள்ளார். முன்னதாக, மலேசிய அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த வங்காளதேச மகளிர் அணி 129 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கேப்டன் நிகர் சுல்தானா 53 ரன்களையும், முர்ஷித் காதுன் 56 ரன்களையும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய மலேசிய அணியில் அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தினர். அதிகபட்சமாக எல்சா ஹன்டர், நட்சயா 9 ரன்களை எடுத்தனர். 5 பேர் டக் அவுட்டாகினர். 41 ரன்களுக்கு மலேசியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க : Womens T20 Asia Cup 2022: வரலாறு படைத்த தாய்லாந்து அணி..! கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி...! ஆசியகோப்பையில் அசத்தல்..
மேலும் படிக்க : MS Dhoni Sachin Photo: சந்தித்துக் கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்!