வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்று பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் தவான் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முதலாவது டி-20 ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்தது. நிக்கலஸ் பூரன் டாஸ் வென்று பீலடிங்கை தேர்வு செய்தார்.


தொடக்க ஆட்டத்தில் குழப்பம்


தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் ஓய்வில் இருப்பதால் மாற்று வீரரை கொண்டு செல்லாத இந்திய அணிக்கு சிறிய சிக்கல் ஏற்பட்டது. ஆனால் ரோஹித் ஷர்மாவுடன் மிடில் ஆர்டர் வீரரான சூர்யகுமார் களம் இறங்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 24 ரன்கள் எடுத்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



சொதப்பிய டாப் மிடில் ஆர்டர்


தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் பெரிதாக சோபிக்காமல் ஸ்லிப் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, ரிஷப் பண்ட் பெயருக்கு இரண்டு பெரிய ஷாட்கள் அடித்து அவுட் ஆனார். பின்னர் வந்த அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் இருந்த போது யதார்த்தமாக ஒரு பவுன்சரை அப்பர் கட் அடிக்க, தேர்ட் மேன் திசையில் கேட்ச் ஆனார்.


ரோகித் ஷர்மா அதிரடி


ஒப்பனிங்கில் களம் இறங்கி இவர்கள் அனைவருடனும் விளையாடி வந்த ரோகித் ஷர்மா, ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் தனது அதிரடி ஆட்டம் மூலம் ரன் ரேட் சரியாமல் பார்த்துக்கொண்டார். அரை சதத்தை கடந்த அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அவர் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: RasiPalan Today, July 30: கன்னிக்கு தன வரவு... தனுசுக்கு ஆதாயம்... உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன?


ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்


அவரை தொடர்ந்து வந்த ஜடேஜா இரண்டு பவுண்டரிகள் அடித்து 14 ரன்களில் அவுட் ஆக, அப்போது வந்தார் ரியல் ஃபினிஷர். மள மளவென சிக்ஸர் பவுண்டரிகளை 360 டிகிரியில் விளாச 170 ரன் வருமா என்று எதிர்பார்த்த நிலையில் 190 ரன்களை எடுத்து கொடுத்து இந்தியாவின் இன்னிங்க்ஸை பாசிடிவ் வைபோடு முடித்து வைத்தார். 19 பந்துகளை சந்தித்த அவர் 41 ரன்களை குவித்தார், அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.






வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்


191 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடி வீரர்களான பூரனும், ஹெட்மயரும், பவலும் கூட சோபிக்காத காரணத்தால் சீரான இடைவெளியில் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தனர். இந்திய அணி இன்று 3 ஸ்பின்னர்களுடன் காளம் இறங்க மூன்று பேரும் விக்கெட்டுகளை சாய்தனர். அஷ்வின், ரவி பிஷனோய், அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட் எடுக்க, ஜடேஜா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


இந்திய அணி வெற்றி


சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் வெஸ்ட் இண்டீர் அணியினரால் ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் 20 ஓவர்களில் 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி பவுலர்கள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட முடிவில் இந்திய அணி 68 ரன்கள் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என முன்னிலை வகிக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.