இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் தவான் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பவுலிங்கை தேர்தெடுத்தது. தொடக்க ஆட்டக்கார்கள் ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.


இறுதியாக தினேஷ் கார்த்திக் தன் அதிரடி ஆட்டத்தால் 41 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.


191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ரன்களுக்குள்ளே அடுத்தடுத்து 3 விக்கெட்களை பறிகொடுத்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய அணிக்கு பயம் காட்டுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் கண்ணாக இருக்க, அனைத்தும் இங்கு தலைகீழாக மாறியது. 


நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் களமிறங்கிய அஷ்வின் அசால்ட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பூரனை 18 ரன்களில் தூக்க, அடுத்தடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் வலையில் வரிசையாக வந்து விழுந்தனர். 


வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்களுக்குள் 8 விக்கெட்களை இழக்க, கடைசி நேரத்தில் கீமோ பால் மற்றும் அல்சாரி ஜோசப் ஓரளவு தாக்குபிடித்து ஆடினர். இறுதியாக 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.


 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணி சார்பில் அர்ஷூதீப் சிங், அஷ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். 


இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண