நாள்: 30.07.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

 காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு :

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

குளிகை :

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய பதவியின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த சில கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழல் அமையும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். செல்வச்சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

எண்ணிய சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் தனவரவு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான எதிர்பார்த்த பணிகள் நிறைவுபெறும். இறை நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். கௌரவ பொறுப்புகளின் மூலம் வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய தேடலை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளவும். அபிவிருத்திக்கான முயற்சிகளில் பொறுமையை கடைபிடிக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். குழப்பம் அகலும் நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

உறவினர்களின் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாக திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். அமைதி வேண்டிய நாள்.