டெஸ்ட் போட்டி:


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. 



இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 2 ரன்களில் நடையைக்கட்டினார். பின்னர், வந்த விராட் கோலின்38 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 31 ரன்களும் எடுக்க, இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 70 ரன்களுடனும், சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.


சதம் விளாசிய ராகுல்:


இந்த நிலையில் 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதிகாலையில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் அவுட் ஃபீல்ட் ஈரமாக இருந்ததால், 25 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியபோதே கேஎல் ராகுல் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது



இச்சூழலில்,  137 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 101 ரன்கள் எடுத்தார். அந்த வகையில், கே.எல்.ராகுல் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார்.  சென்சுரியன் மைதானத்தில் கே.எல்.ராகுல் அடிக்கும் 2 வது சதம், அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுலின் 8 வது சதம் இதுவாகும்.


பின்னர், தென்னாப்பிரிக்க வீரர் நந்த்ரே பர்கர் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக இந்திய அணி 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது.


அசத்திய ககிசோ ரபாடா:


தென்னாப்பிரிக்க அணியினரின் பந்து  வீச்சை பொறுத்த வரை அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சிறப்பாக பந்து வீசினார். அந்த வகையில்,  20 ஓவர்கள் வீசிய அவர் 4 ஓவர்களை மெய்டன் செய்து, 59 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


அதேபோல், மற்றொரு இளம் வீரரான நந்த்ரே பர்கர் 15.4 ஓவர்கள் வீசி 4 ஓவர்களை மெய்டன் செய்து 50 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14.2 ஓவர்கள் முடிவில் 45 ரன்களுடன் விளையாடி வருகிறது.


மேலும் படிக்க: Watch Video: ஆதரவு தெரிவிக்க சென்ற ராகுல்காந்தி - புரட்டி எடுத்த பஞ்ரங் புனியா: ஹரியானாவில் சுவாரஸ்யம்


மேலும் படிக்க: Kagiso Rabada: சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை அதிகமுறை வீழ்த்திய புகழுக்கு சொந்தக்காரர் ரபாடா: முழு விபரம்