இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் டி10 


இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் - T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த லீக் போட்டியானது ஒவ்வொரு சுற்றுகளாக  நடத்தப்பட்டு மிகவும் திறமையான வீரர்களை அடையாளம் காட்டவே இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் டி10  கிரிக்கெட் மற்றும் மைதானத்தில் நடக்கும் ஸ்டிச் பால் கிரிக்கெட்டிற்கும்  இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை அணியினை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 






 


இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக நடிகர் ராம் சரண் உள்ளார். நடிகர் ராம் சரண் ஹைதராபாத் அணியினை வாங்கிய பின்னர், இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் கோர் கமிட்டி உறுப்பினர் ஆஷிஷ் ஷெலர் கூறுகையில், "ராம் சரண் ஐஎஸ்பிஎல்-ல் ஒரு அணியை வாங்கியது எங்கள் லீக்கில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் மற்றும் சினிமா பிரபலமான அவரால் சந்தேகத்திற்கு இடமின்றி ஹைதராபாத்தில் உள்ள வளரும் கிரிக்கெட் வீரர்களை இந்த லீக்கில் பங்குபெறச் செய்ய ஊக்குவிக்க முடியும் என நான் நம்புகின்றேன்." என குறிப்பிட்டுள்ளார். 






ஐஎஸ்பிஎல்லின் முதல் சீசன் அடுத்த ஆண்டு  அதாவது மார்ச் 2 முதல் மார்ச் 9 தேதிகளுக்குள்  மும்பையில் தொடங்க உள்ளது. இந்த சீசனில்  ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்) உள்ளிட்ட ஆறு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.