IND vs SA 1st ODI LIVE: தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா; முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

IND vs SA 1st ODI LIVE Score: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி குறித்த அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

முகேஷ் Last Updated: 17 Dec 2023 05:04 PM
IND vs SA 1st ODI LIVE: இலக்கைத் துரத்தும் இந்தியா..!

117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில்  ஒரு விக்கெட்டினை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs SA 1st ODI LIVE: 116 ரன்களுக்கு ஆல் - அவுட்

தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

IND vs SA 1st ODI LIVE: 23 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி 23 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களை எட்டியுள்ளது. 

IND vs SA 1st ODI LIVE:20 ஓவர்களில் தத்தளிக்கும் தென்னாப்பிரிக்கா அணி

தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs SA 1st ODI LIVE: 19 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி

தென்னாப்பிரிக்கா அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs SA 1st ODI LIVE: 17 ஓவர்கள் ஓவர்..

17 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs SA 1st ODI LIVE: 8வது விக்கெட்டினை இழந்த தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணியின் மஹராஜ் தனது விக்கெட்டினை ஆவேஷ் கான் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். இவர் 4 ரன்கள் சேர்த்திருந்தார். 

IND vs SA 1st ODI LIVE: 16 ஓவர்கள் முடிந்தது..!

16 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs SA 1st ODI LIVE: 15 ஓவர்கள் காலி..!

15 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs SA 1st ODI LIVE: 14 ஓவர்கள் முடிந்தது..!

14 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs SA 1st ODI LIVE: 7 விக்கெட்டுகள் காலி..!

தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் தனது விக்கெட்டினை தனது விக்கெட்டினை 2 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். 

IND vs SA 1st ODI LIVE: டக் அவுட் ஆன வீரர்கள் யார் யார்.!

தென்னாப்பிரிக்கா அணியின் ஹென்றிக்ஸ், வெண்டர் டசன் மற்றும் முல்டர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IND vs SA 1st ODI LIVE: 6 விக்கெட்டுகள் காலி..!

6 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா அணி தத்தளித்து வருகின்றது. 12.4 ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs SA 1st ODI LIVE: 50 ரன்களை எட்டிய தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி 9.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs SA 1st ODI LIVE: மூன்று விக்கெட்டுகளை தட்டித் தூக்கிய அர்ஷ்தீப்

தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஹென்றிக்ஸ், வெண்டர் டசன் மற்றும் டோகி ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தியுள்ளார், 

Background

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக உள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி 1-1 என சமன் செய்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும் நிலையில், இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் விளையாடவுள்ளது.


சாய் சுதர்சன், ரிங்கு சிங் அறிமுகமா..?


டி20 தொடரைப் போலவே, ஒருநாள் தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி வலம் வரலாம். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகலாம். அதே சமயம், சஞ்சு சாம்சன் விளையாடும் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இந்திய அணியில் ரஜத் படிதார், திலக் வர்மா, முகேஷ் குமார் என பல இளம் வீரர்கள் இடம் கிடைக்குமா என்பதையும் பார்க்கலாம்.


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் அவரால் விளையாட முடியாது. அவரைத் தவிர, தீபக் சாஹரும் குடும்ப மருத்துவ அவசரநிலை காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மேலும் கே.எல்.ராகுல், அக்சர் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் யார் யார் அணியில் இடம் பிடிப்பார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.


பந்துவீச்சு எப்படி..?


மூத்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பதினொன்றில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம்.கடந்த டி20யில் குல்தீப் தனது மாயாஜால சுழலினால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை தண்ணீர் குடிக்க வைத்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குல்தீப் விளையாடுவது உறுதியான நிலையில், இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் களமிறங்குவார். வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார், அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் விளையாடுவது உறுதி. 


இன்று மழைக்கு வாய்ப்பா..?


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மழையால் எந்தவித தடையும் இருக்காது. இப்போட்டியில் மழை பெய்ய 2 முதல் 5 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. மழை பெய்தாலும் சில நிமிடங்களே இருக்கும் என்றும் மீதமுள்ள நேரம் முழுவதும் வானம் தெளிவாக இருக்கும். போட்டியின் போது அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரியாக இருக்கும். 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


இந்திய அணி: 


ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா/ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங் / சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங். 


தென்னாப்பிரிக்கா அணி:


ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஜார்ஜி, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, நந்த்ரே பெர்கர், லிசாட் வில்லியம்ஸ்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.