இலங்கையில் எமர்ஜிங் ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. கொழும்புவில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


அரையிறுதியிலே அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி என்பதாலும், இந்திய அணிக்கு எதிரான போட்டி என்பதாலும் அதிரடியான தொடக்கத்துடன் ஆடியது. தொடக்க வீரர்கள் சயீம் அயூப் – பர்ஹான் இருவரும் அரைசதம் விளாசி அதிரடியாக ஆடினர். 17.1 ஓவர்களிலே 121 ரன்களை எட்டிய இந்த ஜோடியை சுதர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் அதிரடியாக ஆடிய சயீம் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் பர்ஹான் 62 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 65 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானர்.




தொடர்ந்து களமிறங்கிய ஓமர் யூசுப் – தய்யப் தாஹிர்  ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், ஓமர் 35 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த காசிம் அக்ரமும் டக் அவுட்டாக, கேப்டன் முகமது ஹாரிஸ் 2 ரன்களில் அவுட்டானர். 187 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை மொத்தமாக தன்வசம் எடுத்தார் தய்யப் தாஹிர்,


முபாசிர் கானை மறுமுனையில் ஸ்ட்ரைக்கில் வைத்துக்கொண்டு தாஹிப் இந்திய பந்துவீச்சுக்கு தண்ணீர் காட்டினார். மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய தாஹிரால் பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது.  சிக்ஸர், பவுண்டரி விளாசிய தாஹிர் சதம் விளாசினார். பாகிஸ்தான் ஸ்கோர் 313 ரன்களை எட்டியபோது அவுட்டானர். அவர் 71 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 108 ரன்கள் எடுத்தார்.




கடைசி கட்டத்தில் மெஹ்ரன் மும்தாஜ், முகமது வாசிம் ஜூனியர் இருவரும் அதிரடி காட்டியதால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியில் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் பாகிஸ்தானை கட்டுப்படுத்த முடியவில்லை. மானவ் சுதர் 9 ஓவர்கள் வீசி 68 ரன்களை வழங்கினார். ஹர்ஷித் ரானா 6 ஓவர்களே வீசி 51 ரன்களை வழங்கினார். ரியான் பராக் மட்டும் 4 ஓவர்களில் 24 ரன்களை வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இமாலய இலக்கை இந்திய அணி எட்டிப்பிடிக்குமா? அல்லது பாகிஸ்தான் கோப்பையை வெல்லுமா? என்று மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Riyan Parag: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை அள்ளிய ரியான் பராக்.. படாரென தாவி கேட்சு பிடித்து அசத்தல்.. வைரலாகும் வீடியோ!


மேலும் படிக்க: IND W vs BAN W: வங்கதேச வீரர்களை அவமதித்தாரா ஹர்மன்பிரீத்? கிரிக்கெட்டில் இது சகஜம் என சப்போர்ட்டுக்கு வந்த ஸ்ம்ரிதி!