மிர்பூரில் பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியாக பரபரப்பாக நடந்து 'டை'யில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சேஸிங்கின் போது ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்த பின், தனது பேட்டால் ஸ்டம்பை வேகமாக அடித்தார். அவர் நடுவர் முடிவில் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஸ்டம்பை அடித்து நொறுக்கிய பிறகு, அம்பயரை நோக்கி அவர் ஏதோ சொல்லிக்கொண்டே வெளியேறுவதை காண முடிந்தது. இந்த ஆட்டம் 'டை'யில் முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா நிதானமாக, சமயோசிதமாக சிந்தித்து பேசியது பலரையும் ஈர்த்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் நடத்தை மற்றும் நடுவர் தீர்ப்புகள் குறித்த அவரது உக்கிரமான கருத்துக்கள் குறித்து மந்தனாவிடம் கேள்விகள் கேட்டனர். விளையாட்டின் உத்வேகத்தை மனதில் வைத்து ஆக்ரோஷமாக செயல்படுவது சிறந்த செயல் அல்ல என்று மந்தனா ஒப்புக்கொண்டார், ஆனால் ஹர்மன்ப்ரீத்தின் செயல் "அந்த தருணத்தின் ஆக்ரோஷத்தால் வெளிப்பட்டது" என்றும் கூறினார்.






ஹார்மன்பிரீத்தின் செயல்


ஹர்மன்ப்ரீத் கூறுகையில், "அவர்கள் (வங்கதேசம்) மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார்கள், சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்தார்கள். மிகவும் முக்கியமான சிங்கிள்-களை தவறவிடாமல் எடுத்தனர். இடையில், நாங்கள் சில ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம், ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆட்டத்தை நன்றாகக் கட்டுப்படுத்தினோம், ஆனால் நான் முன்பு குறிப்பிட்டது போல், சில நடுவர் முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது," என்று ஹர்மன்பிரீத் கூறினார்.


அதோடு இந்த நேர்காணல் முடிந்த பின் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டு இரு அணிகளையும் சேர்த்து புகைப்படம் எடுக்க நிற்க வைக்கப்பட்டது. அப்போது இந்த கோப்பை பகிர்ந்து அளிக்கப்படுவதற்கு காரணமாக அம்பயர்கள் இருப்பதால், அவர்களையும் புகைப்படத்திற்கு வரச்சொல்லுங்கள் என்று ஹர்மன்பிரீத் வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா ஜோட்டியிடம் கூறி அவமரியாதை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டனர். ஆனால் வங்கதேச கேப்டனிடம் ஹர்மன்பிரீத் எதுவும் கூறவில்லை என்று கூறி மந்தனா தனது கேப்டனை பாதுகாத்தார்.


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI Test: ஆஹா..! பொறுப்பான ஆட்டத்தால் டஃப் கொடுக்கும் மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா 209 ரன்கள் முன்னிலை


கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்


இது குறித்து பேசிய மந்தனா, "இரு அணிகளும் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடின. நடுவில் நடந்தவை விளையாட்டின் ஒரு பகுதி. ஆண்கள் கிரிக்கெட்டைப் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் அதிகம் பார்த்திருக்கிறோம், எனவே பெண்கள் கிரிக்கெட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் அசாதாரணமானவை அல்ல. ஹர்மனை ஒரு நபராக எனக்கு தெரியும், அவர் எவ்வளவு வெற்றி பெற விரும்புகிறார் என்பது எனக்கு தெரியும். அதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான் கூறமாட்டேன். உண்மையிலேயே இந்தியாவுக்காக வெல்ல விரும்பினால், இவை நடக்கும்," என்று மந்தனா 3வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு, போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சியில் கூறினார்.






அதை முடிவு செய்ய ஐசிசி குழு உள்ளது


"அவர் வங்கதேச கேப்டனின் எதுவும் சொன்னதாக நான் நினைக்கவில்லை. நீங்கள்தான் கூறியுள்ளீர்கள். நான் கேட்டதில் இருந்து, நடுவரைப் பற்றி கொஞ்சம் பேசினார். ஆனால் அவர் வங்கதேச வீரர்கள் பற்றி எதுவும் சொன்னதாக நான் நினைக்கவில்லை. போட்டியின் போது நடக்காத விஷயங்களை நாங்கள் பேசக்கூடாது. போட்டிக்கு பிந்தைய விஷயங்களில் கேமரா இல்லை. அது போட்டிக்கு பிந்தைய நேர்காணலுக்கு பிறகு நடந்தது, எனவே அதைப் பற்றி பேச வேண்டாம்" என்று மந்தனா மேலும் கூறினார். "ஹர்மன்ப்ரீத்தின் நடவடிக்கை மற்றும் அவரது கருத்துக்கள் குறித்து முடிவெடுக்க ஐசிசி உள்ளது. தடை அல்லது அபராதம் விதிப்பது போன்ற எதையும் முடிவு செய்ய நாங்கள் யாரும் இல்லை. அந்த விஷயங்களை முடிவு செய்ய ஐசிசி குழு உள்ளது," என்று மேலும் கூறினார்.