கொழும்பில் இன்று (ஜூலை 23 ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் எட்டு அணிகள் கொண்ட வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா A மற்றும் பாகிஸ்தான் A அணிகள் மோதுகின்றன.


இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி


இந்த தொடரில் இந்திய அணி இதுவரை எந்த போட்டியிலும் தோற்காமல் இறுதிப்போட்டி வரை வந்துள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது, அதுவும் இந்திய அணியுடன் தான். இந்திய அணி கேப்டன் யாஷ் துல் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் ஆகியோர் இந்த தொடரில் அதிக ரன் எடுத்தோர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.


இந்த மிக முக்கியமான ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை இந்த இருவரும் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஒமைர் யூசுப்பின் அபார சதத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.


IND A vs PAK A: இன்று இந்தியா- பாக். இறுதிப்போட்டி… மழைக்கு வாய்ப்பா? பிட்ச் ரிப்போர்ட் என்ன? போட்டியை எப்போது, எங்கு காணலாம்?


போட்டி எப்போது? எப்படி காணலாம்?


இந்தியாவுடனான கடைசி சந்திப்பில் பாக்கிஸ்தான் அணி பேட்டர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். அதனால் முகமது ஹரிஸ் தலைமையிலான அணி இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆர்வமாக இருக்கும். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் நேரலையாக காணலாம். ஃபேன்கோடு ஆப்பிலும், மொபைல், டிவி போன்ற டிவைஸ்களில் காணலாம். 


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI Test: ஆஹா..! பொறுப்பான ஆட்டத்தால் டஃப் கொடுக்கும் மேற்கிந்திய தீவுகள்.. இந்தியா 209 ரன்கள் முன்னிலை


பிட்ச் ரிப்போர்ட்


கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. பி சாரா ஓவல் மைதானத்தில் பாகிஸ்தான் அனி சிறப்பாக விளையாடினாலும் இந்த மைதானத்தில் ஆட அவர்கள் அணியில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள், என்றாலும், பேட்ஸ்மேன்கள் செட் ஆகிவிட்டால் கண்டிப்பாக பெரிய ஸ்கோர்கள் குவிக்கலாம். யஷ் துல் மற்றும் சாய் சுதர்சன் போன்றவர்களிடம் இருந்து பெரிய ரன்களை எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில் சராசரி ரன் குவிப்பு 240-250 ஆக உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 அல்லது அதற்கு மேல் ரன்களை எடுத்தால், போட்டியில் வெற்றி பெறுவதற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன.



வானிலை


போட்டி தொடங்கும்போது பகலில் மழைக்கு சிறிய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாலையில் மழை தீவிரமாக இருக்கும் என்று தெரிகிறது. மழைப்பொழிவு வாய்ப்பு 100 சதவீதம் கூறப்பட்டுள்ளது. எனவே போட்டி குறைந்த ஓவர்களாக சுருக்கப்படலாம். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் வாய்ப்பு நிறைய உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 31 ஆகவும் குறைந்தபட்சமாக 26 டிகிரியாகவும் இருக்கும்.


ஆடும் XI அணிகள்


இந்தியா A: சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா, நிகின் ஜோஸ், யாஷ் துல்(c), நிஷாந்த் சிந்து, ரியான் பராக், துருவ் ஜூரல்(w), ஹர்ஷித் ராணா, மானவ் சுதர், RS ஹங்கர்கேகர், யுவராஜ்சிங் தோதியா


பாகிஸ்தான் A: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், உமைர் யூசுப், தயப் தாஹிர், காசிம் அக்ரம், முகமது ஹாரிஸ்(w/c), முபாசிர் கான், அமத் பட், முகமது வாசிம் ஜூனியர், சுபியான் முகீம், அர்ஷத் இக்பால்