மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
விசா வழங்குவதில் சிக்கல்:
அதே நேரம் ஒரு சில அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாத சூழலும் நிலவுகிறது. மேலும்,ஐசிசி நடத்தும் தொடரிலும் மட்டுமே இரு அணியும் இணைந்து விளையாடி வருகிறது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தி வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இந்திய வருவதற்கு விசா வழங்குவதில் சிக்கல் எழுந்தது.
இச்சூழலில், பாகிஸ்தானில் இருந்து சுமார் 60 பத்திரிக்கையாளர்கள் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி குறித்து செய்தி சேகரிக்க இந்தியா வரவுள்ளனர்.
விசா வழங்கிய இந்தியா:
முன்னதாக, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்திற்கும் இந்தியா விசா வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்குவதை தாமதம் ஏ்றபட்டது. மற்ற அணிகளுக்கு விசா வழங்கிய பல நாட்களுக்கு பின்னரே, பாகிஸ்தான் அணியினருக்கு இந்தியா விசா வழங்கியது.
பாகிஸ்தான் தங்களது நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சனை இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்தித் தொடர்பாளர் உமர் ஃபரூக் பேசுகையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சனை இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வாரியத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் ஜகா அஷ்ரஃப் வெளியுறவுச் செயலர் சைரஸ் சஜ்ஜத்தை சந்தித்து பேசியுள்ளார்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 பத்திரிகையாளர்களுக்கு இந்தியா விசா வழங்கியுள்ளது.
இந்தியா வரும் பிசிபி தலைவர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் (Pakistan Cricket Board) அஷ்ரஃப் நாளை இந்தியா வருகிறார். அப்போது அவருடன் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும் வர உள்ளனர். இவர்கள் அனைவரும் அகமதாபாத்தில் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை அவர்கள் பார்க்க உள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்:
கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 14ம் தேதி மோத உள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிக்கு பிறகு, 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் நேரடியாக இந்திய அணியுடன் மோத உள்ளதால் இந்த போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பாதுகாப்பு வளையத்தில் அகமதாபாத்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக அகமதாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: IND Vs AFG, Innings Highlights; இந்திய பந்துவீச்சை நையபுடைத்த ஆஃப்கானிஸ்தான்; 273 ரன்கள் டார்கெட்
மேலும் படிக்க: Jasprit Bumrah: பவர் பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பிய ஜஸ்பிரித் பும்ரா!