ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. போட்டி நடைபெறும் துபாய் மைதானம் சேசிங்கிற்கு ஒத்துழைக்கும் என்றாலும், இந்திய அணி இமாலய ஸ்கோரை குவித்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறலாம்.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ஜடேஜா, ஆவேஷ்கானுக்கு பதிலாக தீபக் ஹூடா, பிஷ்னோய் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வந்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், தீபக்ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், ரவி பிஷ்னோய், சாஹல் மற்றும் அர்ஷ்தீப்சிங் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
அக்ஷர் படேல் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி சுழலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. மேலும், இரண்டாவது ஆல்ரவுண்டராக இன்று தீபக்ஹூடா களமிறங்கியுள்ளார். இந்திய அணியின் இந்த முடிவு கைகொடுக்குமா? என்பது போட்டி முடிவில் தெரிந்துவிடும்.
அதேசமயம் பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பகர்ஜமான், குஷ்தில்ஷா, இப்திார் அகமது, ஷதாப்கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹரிஷ் ராஃப், முகமது ஹஸ்னயின், நசீம் ஷா ஆகியோர் களமிறங்குகி்னறனர். ஹசன் அலி களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் பந்துவீச்சில் நசீம்ஷா, ஹஸ்னாயின், ஹரீஷ் ராஃப் வேகத்தில் மிரட்டுவார்கள் என்பதால் இந்தியாவின் ரோகித், கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் தங்களது ஆதிக்கத்தை காட்ட வேண்டியது அவசியம். ஜடேஜா இல்லாத காரணத்தால் ஹர்திக் பாண்ட்யாவிற்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
சுழலில் வாய்ப்பு கிடைத்துள்ள பிஷ்னோய், பேட்டிங்கில் வாய்ப்பு கிடைத்துள்ள தீபக் ஹூடா தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு மிகுந்த விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
மேலும் படிக்க : Kohli's T20I Record: டி20 போட்டிகளில் 100வது சிக்ஸரை விளாசுவாரா விராட்கோலி...! மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள்...!
மேலும் படிக்க : IND vs PAK Live : டாஸ் வென்ற பாகிஸ்தான்..! இந்தியா முதலில் பேட்டிங்..!