ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் நடைபெற்ற இரண்டு குரூப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதன்காரணமாக ஏ பிரிவில் முதலிடம் பிடித்து இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 


இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதைவிட இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த அணியின் பந்துவீச்சை குறிப்பிடும் போது ஒரு வார்த்தையை என்னால் பயன்படுத்த முடியாது.






ரவீந்திர ஜடேஜா தற்போது காயம் ஏற்பட்டு ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருடைய காயம் தொடர்பாக அணியின் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பை தொடருக்கே அவர் விளையாட மாட்டார் என்று கூற முடியாது. அதற்கு நிறையே நேரம் உள்ளது. அதற்குள் அவருடைய காயம் சரியாகும் பட்சத்தில் அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. 


ஆகவே அந்த செய்தி தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை. விராட் கோலி என்றவுடன் அனைவரும் அரைசதம், சதம் என்று ரெக்கார்டுகளை பேச தொடங்கிவிடுகின்றனர். ஆனால் அவர் அணிக்காக செய்யும் சில சிறிய விஷயங்களும் அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார். 






ராகுல் டிராவிட் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டிராவிட் இந்திய பந்துவீச்சு தொடர்பாக பேசியது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர். 


ஏற்கெனவே ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்து இருந்தது. இந்தச் சூழலில் இரண்டாவது முறையாக இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ள ஜடேஜாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இவை தவிர வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் கடந்த இரண்டு குரூப் போட்டிகளிலும் மோசமாக பந்துவீசினார். ஆகவே அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவை தோற்கடிக்க துடிப்புடன் உள்ளது. அந்த அணியின் வீரர்கள் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில் உள்ளனர்.