IND vs PAK Live : 2 பந்துகளில் 2 ரன்கள்..! இருக்கை நுனியில் ரசிகர்கள்..!
IND vs PAK Live : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் கீழே விரிவாக காணலாம்.
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆசிப் அலி ஆட்டமிழந்ததால் 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டதால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 10 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்படுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களும் முழு நம்பிக்கையுடன் வீசி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வந்த முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணியினர் உற்சாகம் அடைந்தனர்.
இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கிய டேஞ்சர் பேட்ஸ்மேன் முகமது நவாஸ் 20 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர்குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய முகமது நவாஸ் அதிரடி ஆடி வருவதால் பாகிஸ்தான் வெற்றிக்கு 32 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய முகமது நவாஸ் அதிரடி ஆடி வருவதால் பாகிஸ்தான் வெற்றிக்கு 32 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் ஆட்டமிழந்த நிலையில், அந்த அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் பக்கர் ஜமான் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் வீசிய சுழலில் சிக்கி 10 பந்துகளில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பில் 181 ரன்களை விளாசி அசத்தியது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி பொறுப்புடன் பேட் செய்து அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணி 17.1 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்தின் மார்டின் கப்தில் விளாசிய 306 பவுண்டரிகளை விராட்கோலி இன்றைய போட்டியில் முந்தினார்.
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை விளாசியுள்ளது.
இந்திய அணிக்காக அதிரடி காட்ட முயற்சித்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இந்திய அணிக்காக அதிரடியாக ஆடி வந்த கே.எல்.ராகுல் 20 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களை எடுத்து அசத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய ரோகித்சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்தியாவின் ரோகித்சர்மா - கே.எல்.ராகுல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்தியா 4.2 ஓவர்களில் 50 ரன்களை விளாசியது.
இந்திய அணியின் ரோகித்சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணி 4 ஓவர்களில் 46 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவின் ரோகித்சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக ஆடி வருவதால் இந்திய அணி 3 ஓவர்களிலே 34 ரன்கள் விளாசி அசத்தியுள்ளது.
இந்திய கேப்டன் ரோகித்சர்மா பாகிஸ்தான் வீரர் நசீம்ஷா வீசிய முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸர் அடித்து அசத்தலாக இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
இந்திய அணிக்காக ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் பேட்டிங்கைத் தொடங்கியுள்ளனர்.
சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக துபாய் மைதானத்தில் இரு நாட்டு ரசிகர்களும் குவிந்துள்ளனர்.
இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணியில் அக்ஷர் படேலும், பாகிஸ்தான் அணியில் ஹசன் அலியும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Background
ஆசிய கோப்பைத் தொடரில் இன்று துபாய் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர மோதுகின்றன. ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில் இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதால் இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக களமிறங்கும். அதேசமயத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க முனைப்புடன் களமிறங்கும். இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகம் இல்லை.
பாகிஸ்தான் அணியில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கிய தஹானிக்கு ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் இன்றைய போட்டியில் களமிறங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டியதுடன் பந்துவீச்சிலும் ஓரளவு பங்களித்தார். இதனால், அவர் ஆட முடியாதது பாகிஸ்தான் அணிக்கு இழப்பாக அமைந்துள்ளது.
இந்திய அணியிலும் மிகவும் முக்கிய வீரரான ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆடாததும் இந்திய அணிக்கு இழப்பாக அமைந்துள்ளது. இதனால், அவருக்கு பதிலாக இந்திய அணியில் அக்ஷர் படேல் அல்லது அஸ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் 4 சுற்றின் முக்கிய போட்டியான இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்வது எளிதாகிவிடும் என்பதால் இரு அணி வீரர்களும் முனைப்புடன் விளை்யாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் ஏற்கனவே கிரிக்கெட் ஆடிய அனுபவம் ஹசன் அலிக்கு இருப்பதால், அவர் மீண்டும் அணியில் இடம்பெற்றால் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயத்தில், கடந்த போட்டியில் இளம் வீரர் நசீம்ஷா அசத்தியதால் அவரைப் போலவே ஹசனாயினும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கும் வாய்ப்பு அளிப்பது குறித்து பாகிஸ்தான் அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியில் இன்று கேப்டன் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக்பாண்ட்யா, புவனேஷ்குமார், அஸ்வின் அல்லது அக்ஷர், அர்ஷ்தீப், சாஹல் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், ரிஸ்வான், பகர்ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில்ஷா, ஷதாப்கான், ஆசிப் அலில முகமது நவாஸ், நஷீம்ஷா, ஹரீஷ் ராஃப், ஹசன் அலி களமிறங்க வாய்ப்பு உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -