இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும். நட்சத்தி வீரராக வலம் வருபவரும் விராட்கோலி. இன்று பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விராட்கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் மட்டும் விராட்கோலி மூன்று சிக்ஸர் விளாசினால், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக 100 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.


இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித்சர்மா மட்டுமே 100 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் விராட்கோலி மூன்று சிக்ஸர்களை விளாசினால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார்.




சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களுக்கு மேல் விளாசியவர்கள் பட்டியலில் நியூசிலாந்தில் மார்டின் கப்தில் 172 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 165 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

கெயில் 124 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மோர்கன் 120 சிக்ஸர்களுடனும், ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் 117 சிக்ஸர்களுடனும், அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங் 111 சிக்ஸர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


விராட்கோலிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இயான் லீவிஸ் 110 சிக்ஸர்களுடனும், நியூசிலாந்தின் முன்ரோ 107 சிக்ஸர்களுடனும், ஆஸ்திரேலியாவின் வார்னர் 100 சிக்ஸர்களுடனும் களத்தில் உள்ளனர். கோலிக்கு முன்னதாக பொல்லார்ட் 99 சிக்ஸர்களுடன் உள்ளார். ஒரு மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய விராட்கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் எடுத்தார். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் விளாசினார்.


இதனால், இன்றைய போட்டியில் கண்டிப்பாக விராட்கோலி 100 சிக்ஸர்களை விளாசுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்திய அணிக்காக முதன்முறையாக 100க்கும் மேற்பட்ட டி20 ஆடிய வீரர் என்ற பெருமையை படைத்த விராட்கோலி 101 டி20 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 402 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 31 அரைசதங்கள் அடங்கும். அதில் 303 பவுண்டரிகள் மற்றும் 97 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி விராட்கோலி டெஸ்ட் போட்டிகளில் 24 சிகக்ஸர்களையும், ஒருநாள் போட்டிகளில் 126 சிக்ஸர்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 218 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.


மேலும் படிக்க : Watch Video: அந்த வார்த்தையை பயன்படுத்தணும்னு தோணுது.. என்னால சொல்ல முடியாது.. டிராவிட்டின் வைரல் வீடியோ..


மேலும் படிக்க : Jadeja Ruled Out : உலகக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகலா? இதுவா காரணம்? இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி..!