ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (அக்டோபர் 22) இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற 21 வது லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.


முன்னதாக, இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.


கோலிக்கு கிடைத்த சாதனை:


இந்த போட்டியில் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதன்படி,  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களும் சுப்மன் கில் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


இந்நிலையில், களமிறங்கிய விராட் கோலி இந்த போட்டியிலும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அதன்படி, 104 பந்துகள் வரை களத்தில் நின்ற அவர் 95 ரன்களை வரை எடுத்தார்.


முன்னதாக, 48 வது ஓவரில் விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, அப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விராட் கோலியின் இந்த ஆட்டத்தை  சுமார் 43 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.


அதிகபட்ச பார்வையாளர்கள்:


நேற்றைய ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் தான் அதுவும் கோலி சதம் அடிக்க 5 ரன்கள் தேவைப்பட்டபோது தான் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. இது தான் ஐசிசி உலகக் கோப்பையில் எல்லா வடிவிலான போட்டிகளிலும் அதிக பார்வையாளர்களைப் பதிவு செய்த போட்டியாக உள்ளது. 


இதற்கு முன்னர், இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது 35 மில்லியன் பார்வையாளர்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பதிவு செய்ததே சாதனையாக இருந்தது.


அதேபோல், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியின் போது 25 மில்லியன் பார்வைகளை கடந்தது சாதனையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சதத்தை தவறவிட்ட கோலி:


இந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி நூலிழையில்  சதத்தை தவறவிட்டார்.


இது ரசிகர்களை பெரும் சோகத்திற்கு ஆளாக்கியது. அதேநேரம் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியது.


முன்னதாக, இதுவரை நடந்து முடிந்த இந்த தொடரின் லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத அணியாக இந்திய அணி இருக்கிறது.


அதேபோல், புள்ளிப்பட்டியலிலும் இந்திய அணியின் ஆதிக்கம்தான் இருக்கிறது. இந்நிலையில், தான் தனது 6வது லீக் போட்டியில் அக்டோபர் 29ஆம் தேதி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.


மேலும் படிக்க: Pak Vs AFG Score LIVE: 283 ரன்கள் நோக்கி களம்; பாகிஸ்தானின் வேகத்துக்கு ஈடு கொடுத்து இமாலய இலக்கை எட்டுமா ஆஃப்கானிஸ்தான்


மேலும் படிக்க: Bishan Singh Bedi Dies: இந்திய கிரிக்கெட்டின் சுழல் ஜாம்பவான் பிஷன்சிங் பேடி மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி