Pak Vs AFG Score LIVE: துவம்சம் ஆன பாகிஸ்தான் பவுலிங்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் இமாலய வெற்றி
Pak Vs AFG Score LIVE: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
பாகிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் 113 பந்தில் 87 ரன்கள் சேர்த்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை பாகிஸ்தானை 8 முறை எதிர்கொண்டு அதில் 7 முறை தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கான் அணி வெற்றி பெற்று மோசமான வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றியும், மூன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
47 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 272 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற 18 பந்துகளில் 11 ரன்கள் தேவை.
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி 22 பந்துகளில் 18 எடுத்தால் வெற்றியை தனதாக்கும்.
கடைசி 4 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 19 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 253 ரன்கள் சேர்த்துள்ளது.
44 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 248 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற இன்னும் 36 பந்தில் 35 ரன்கள் தேவை.
மூன்றாவது மற்றும் நான்காவது வீரராக களமிறங்கிய ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா கூட்டணி 58 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்துள்ளனர்.
43 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. போட்டி மிகவும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது.
42 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 229 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 48 பந்தில் 54 ரன்கள் தேவைப்படுகின்றது.
மூன்றாவது வீரராக களமிறங்கி 58 பந்துகளை எதிர் கொண்டு அதில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை மிகவும் நெருக்கடியான நேரத்தில் எடுத்துள்ளார் ரஹ்மத் ஷா.
40 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 221 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது.
ரஹ்மத் ஷா 53 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நோக்கி முன்னேறி வருகின்றார்.
38 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 211 ரன்கள் சேர்த்துள்ளது
37 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
36.4 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை 200 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 36வது ஓவரை வீசிய ஹசன் அலி அந்த ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் மெய்டனாக வீசி ஆஃப்கான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 35 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 195 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
34 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 191 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 92 ரன்கள் தேவை.
சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் தனது விக்கெட்டினை 113 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். இவர் 10 பவுண்டரி விளாசியிருந்தார்.
33 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 189 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
32 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் வெற்றிக்கு இன்னும் 99 ரன்கள் தேவை.
31.2 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 183 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவை.
ஒன் டவுனாக களமிறங்கிய ரஹ்மத் ஷா, தொடக்க வீரர் இப்ராஹிம் கூட்டணி 59 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
30 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 175 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 20 ஓவர்களில் அதாவது 120 பந்துகளில் 108 ரன்கள் தேவை.
இப்ராஹிம் மற்றும் ரஹ்மத் ஷா கூட்டணி இதுவரை 50 பந்துகளை எதிர்கொண்டு 44 ரன்கள் சேர்த்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடி வருகின்றது.
29 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 171 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
28 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 161 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 152 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. அணியின் வெற்றிக்கு இன்னும் 25 ஓவர்களில் 131 ரன்கள் தேவை.
24.3 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக இப்ராஹிம் 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
24 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 148 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. ஆஃப்கான் அணி வெற்றி பெற 26 ஓவர்களில் 135 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.
22 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு 28 ஓவர்களில் 148 ரன்கள் தேவை.
அதிரடியாக விளையாடிய ஆப்கானிஸ்தன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அவுட் ஆனார்.
போட்டியின் 22வது ஓவரினை வீசிய அஃப்ரிடி பந்தில் சிறப்பாக விளையாடி வந்த குர்பாஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 53 பந்தில் 65 ரன்கள் சேர்த்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஜோடியான குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் கூட்டணி 21 ஓவர்கள் முடிவில் அதாவது 126 பந்துகளை எதிர்கொண்டு 130 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் குர்பாஸ் 65 ரன்களுடனும், இப்ராஹிம் 62 ரன்களும் எடுத்துள்ளனர்.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடிவரும் ஆஃப்கான் அணி முதல் 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த அணியின் வெற்றிக்கு 30 ஓவர்களில் 155 ரன்கள் தேவை.
19 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
18 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணி, ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களின் விக்கெட்டினை வீழ்த்த தற்போது தன்னிடம் உள்ள 6வது பந்து வீச்சாளரை பயன்படுத்தி வருகின்றது. இஃப்திகார் போட்டியின் 18வது ஓவரை வீசி வருகின்றார்.
17 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் விளாசி, வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றது.
பாகிஸ்தான் அணி இதுவரை 16 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றாமல் 105 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது. இதில் 17 பவுண்டரிகள் ஆஃப்கான் தரப்பில் விளாசப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி அடுத்து வரும் ஓவர்களில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து கைப்பற்றத் தவறினால் வெற்றியை மறந்து விட வேண்டியதுதான்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான குர்பாஸ் 38 பந்துகளில் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார். இவர் இதுவரை 9 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணி 15.3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
15.2 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 99 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான இப்ராஹிம் 54 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இந்த தொடரில் இவரது முதல் அரைசதம் இதுவாகும்.
14.1 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகின்றது. ஆஃப்கான் அணியின் வெற்றிக்கு இன்னும் 36 ஓவர்களில் 196 ரன்கள் தேவை.
ஆஃப்கான் அணியின் தொடக்க ஜோடியான குர்பாஸ் 42 ரன்களிலும் இப்ராஹிம் 45 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.
13 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கான் அணியின் தற்போதைய ரன்ரேட் 6.23ஆக உள்ளது. இன்னும் ஆஃப்கான் வெற்றிக்கு 37 ஓவர்களில் 202 ரன்கள் தேவை.
ஆஃப்கான் வீரர் இப்ராஹிம் அடித்த பந்தை, ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த இஃப்திகார் தவறவிட அது பவுண்டரிக்குச் சென்றது.
12 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
10 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்துள்ளது.
தான் வீசிய 8வது ஓவரில் 17 ரன்கள் வாரிக் கொடுத்த ஹாரீஸ் ராஃப், 10 வது ஓவரை மெய்டனாக வீசியுள்ளார். 10 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் 8வது ஓவரை வீசிய ஹாரீஸ் ராஃப்க்கு அதுதான் இந்த போட்டியில் முதல் ஓவர். இந்த ஓவரில் ஹாரீஸ் ராஃப் 4 பவுண்டரிகளை வாரிக் கொடுத்துள்ளார்.
8 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்துள்ளது.
7.5 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஹாரீஸ் ராஃப் வீசிய 8வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி மிரட்டிவிட்டுள்ளார் ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ்.
7 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
கள நடுவரின் முடிவை மேல்முறையீடு செய்த இப்ராஹும்முக்கு மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என பதில் அளித்துள்ளார்.
போட்டியின் 6வது ஓவரில் இப்ராஹிம்முக்கு கள நடுவர் விக்கெட் கொடுக்கவே, குர்பாஸ் மூன்றாவது நடுவரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அஃப்ரிடி 3 ஓவர்களும் ஹசன் அலி 2 ஓவர்களும் வீசியுள்ளனர்.
4 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் இன்னிங்ஸை இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் குர்பாஸ் ஆகியோர் வழக்கம்போல் தொடங்கியுள்ளனர்.
முதல் மூன்று ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.64 என்ற நிலையில் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் முகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பாட்ட ரஷித் கான் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றப்பில்லை.
களமிறங்கியது முதல் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசி வந்த இஃப்திகார் 50வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 27 பந்தில் 40 ரன்கள் விளாசி இருந்தார். இவர் 2 பவுண்டரி 4 சிக்ஸர் விரட்டியிருந்தார்.
49 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டினை இழந்து 279 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் இஃப்திகார் மற்றும் ஷதாப் கான் 36 பந்தில் 55 ரன்கள் சேர்த்து அதிரடி ரன் குவிப்பில் விளையாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 250 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
43 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அணியின் தற்போதைய ரன்ரேட் 4.86ஆக உள்ளது.
சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தனது விக்கெட்டினை 92 பந்தில் 74 ரன்கள் சேர்த்த நிலையில் நூர் பந்தில் அவுட் ஆனார்.
41.1 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் சேர்த்து அதிரடிகாட்டி வருகின்றது.
40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய ரன்ரேட் 4.77ஆக உள்ளது.
38 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
69 பந்துகளை எதிர்கொண்டு, இந்த தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
34 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சவுத் தனது விக்கெட்டினை முகமது நபி பந்தினை தூக்கி ஆட முயற்சி செய்து இழந்து வெளியேறினார். இவர் 34 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 64 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நெருங்கி வருகின்றார்.
31.3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
31 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 145 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் தற்போதைய ரன்ரேட் 4.68ஆக உள்ளது.
30 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து மிகவும் மந்தமான முறையில் ரன்கள் சேர்த்து வருகின்றது.
29 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 137 ரன்கள் சேர்த்து மிகவும் நிதானமாக விளையாடி வருகின்றது.
27 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 126 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
25 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டரின் வலுவான பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டினை நூர் அகமது பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் தனது முதல் ரன்னை சிக்ஸர் மூலம் எடுத்துள்ளார். 24 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் களமிறங்கியுள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணியின் அப்துல்லா 75 பந்தில் 58 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை நூர் அகமது பந்து வீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் இழந்து வெளியேறினார். இவர் 5 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி இருந்தார்.
22 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 109 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
66 பந்துகளில் பாபர் அசாம் மற்றும் அப்துல்லா கூட்டணி 50 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அப்துல்லா, பாபர் அசாம் கூட்டணி இதுவரை 65 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி 21 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. ஆஃப்கான் தரப்பில் விக்கெட் வீழ்த்த தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா 60 பந்துகளை எதிர்கொண்டு தனது அரைசதத்தினை எட்டி சிறப்பாக விளையாடி வருகின்றார்.
18 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக அப்துல்லா 48 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா இதுவரை 52 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசி 45 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நெருங்கி வருகிறார்.
16 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 82 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 15வது ஓவரை ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் வீசி வருகின்றார்.
14 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 72 ரன்கள் சேர்த்து தனது ரன்ரேட்டை சிறப்பாக விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 64 ரன்கள் சேர்த்தது.
முதல் 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசியுள்ளது.
களமிறங்கிய தான் எதிர்கொண்ட முதல் பந்தினை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுண்டரிக்கு விரட்டி பாகிஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
11வது ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை இழந்துள்ளது. இதில் அப்துல்லா ஒமர்ஜாய் வீசிய முதல் பந்தினை எதிர்கொண்ட இமாம் உல்ஹக் தனது விக்கெட்டினை 17 ரன்களில் இழந்து வெளியேறினார்.
முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.6ஆக உள்ளது.
10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
முதல் 9 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் சேர்த்து ரன்கள் குவித்து வருகின்றது.
பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகின்றது.
6 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை மொத்தம் 1000 பவுண்டரிகள் 10 அணிகளும் சேர்ந்து விளாசியுள்ளன. இந்த தொடரில் தற்போது 22வது லீக் போட்டி நடைபெற்று வருகின்றது.
முதல் ஐந்து ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு விளாசி பாகிஸ்தான் அணியின் முதல் சிக்ஸரையும், இந்த போட்டியின் முதல் சிக்ஸரையும் அப்துல்லா பறக்கவிட்டுள்ளார்.
3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணி சென்னையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இதுவரை தோல்வியைச் சந்தித்ததே கிடையாது. சர்வதேச போட்டிகள், ஐசிசி போட்டிகள் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் இரண்டாவது ஓவரை முஜீப் உர் ரகுமான் வீசி வருகின்றார்.
போட்டியின் முதல் ஓவரில் ஆஃப்கான் வீரர் நவீன் வீசிய கடைசி பந்தினை இமாம் அட்டகாசமாக பவுண்டரிக்கு தட்டிவிட்டு இந்த போட்டியின் முதல் பவுண்டரியை விளாசினார்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் இன்னிங்ஸை நவீன் உல்-ஹாக் தொடங்கியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை அப்துல்லா மற்றும் இமாம் உல்-ஹக் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரஷித் கான், நபி, முஜீப் மற்றும் நூர் என மொத்தம் 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
அப்துல்லா ஷபீக், இமாம்- உல்-ஹக், பாபர் ஆசம் (c), முகமது ரிஸ்வான் (WK), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான். உசாமா யிர். ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஹரிஸ் ரவுஃப்
ரஹ்மானுல்லா. குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (C), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் (WK), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், எச். நூர் அகமது.
சென்னையில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது
Background
Pak Vs AFG World Cup 2023: சென்னையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 22வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல்:
சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் 4 லீக் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன.
பலம் & பலவீனங்கள்:
பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கேப்டன் பாபர் அசாமின் ஃபார்ம் அணிக்கு தலைவலியாக மாறியுள்ளது. ரிஸ்வான் மட்டுமே தொடர்ந்து நிலையான ஆட்டத்த வெளிப்படுத்தி வருகிறார். உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பினும், நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு அது சாதகமாக அமையவில்லை என்பதே உண்மை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் எக்ஸ்ட்ராக்களாக ரன்களை வாரி வழங்கினர். அதோடு, வழக்கம்போல் ஃபில்டிங்கிலும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மறுமுனையில் சுழற்பந்துவீச்சை முதன்மையான ஆயுதமாக கொண்டுள்ள ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. சுழலுக்கு சாதகமான சென்னையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அது நிகழ வாய்ப்புள்ளது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அத்தனை முறையும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
சென்னை சிதம்பரம் மைதானம் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம் ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம். டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே விரும்புகின்றன.
உத்தேச அணி விவரங்கள்:
பாகிஸ்தான்: சவுத் ஷகீல் , பாபர் அசாம் (கேப்டன்) , அப்துல்லா ஷபிக் , IU ஹக் , இப்திகார் அகமது , முகமது நவாஸ் , முகமது ரிஸ்வான் , அஃப்ரிடி , உசமா மிர் , ஹாரிஸ் ராஃப் , ஹசன் அலி
ஆப்கானிஸ்தான்:
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்) , இப்ராஹிம் சத்ரான் , ஆர் ஷா, முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஐஏ கில், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ரஷித் கான், நவீன் உல் ஹக், முஜீப் உர்மான்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -