IND vs NED T20 WC LIVE: இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
IND vs NED T20 World Cup 2022 LIVE Score : இந்தியா- நெதர்லாந்து அணிகள் டி20 போட்டிகளில் மோதுவது இதுவே முதன்முறை. அந்தவகையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16 ஓவர்களில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது. 24 பந்துகளில் 93 ரன்களை நெதர்லாந்து எடுக்க வேண்டியுள்ளது.
நெதர்லாந்து அணியின் வீரர் டாம் கூப்பரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார். காலின் அக்கர்மேன் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். இந்த இன்னிங்ஸில் இது அஸ்வினுக்கு 2வது விக்கெட் ஆகும்.
நெதர்லாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
20 ஓவர்களின் முடிவில் இந்தியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது.
இன்றைய நெதர்லாந்து அணிக்கு எதிராக முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 37 பந்துகளில் 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி கொண்டிருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அவுட்டானார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் கடந்து ஆடி வருகிறார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 42 ரன்களுடனும், கோலி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 8 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.
எல்பிடபிள்யூ முறையில், கே.எல். ராகுல் அவுட்டாகியதன் மூலம், இந்தியா அதன் முதல் விக்கெட்டை இழக்கிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கியுள்ளனர். முதல் ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 7 ரன்களை இந்தியா குவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நெதர்லாந்து முதல் முறை மோதுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Background
ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, சிட்னியில் இன்று காலை 8.30 மணிக்கு தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளும், நண்பகல் 12.30 மணிக்கு இந்தியா- நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றனர். அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாவே அணியை மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறது. இந்த போட்டியானது பெர்த்தில் நடைபெற இருக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பவுலிங் அணியில் பலமாக இருக்கும் இந்திய அணி, இன்றைய நெதர்லாந்து அணிக்கு எதிரான 2 வது போட்டியில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து அணி எளிதாக கருதக்கூடாது. டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் நெதர்லாந்து விளையாடிய 3 போட்டிகளில் 2 ல் வென்று கெத்துகாட்டி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. இருப்பினும், நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் தோல்வியுற்றது.
இந்தியா - நெதர்லாந்து அணிகள் இதுவரை நேருக்குநேர் :
இந்தியா- நெதர்லாந்து அணிகள் இதுவரை ஒரு முறை கூட டி20 போட்டிகளில் சந்தித்தது இல்லை. இதுவே முதல்முறை. முன்னதாக, இரு அணிகளுக்கு 2 ஒருநாள் போட்டிகளில் சந்தித்து, அதில் இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
மழைக்கு வாய்ப்பா..?
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் 30 சதவீத மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. போட்டி தொடங்கி சிறிது நேரத்தில் மழையின் வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 51 சதவீத ஈரப்பதத்துடன் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். அதேபோல், 12 சதவீத மேக மூட்டமும் காணப்படும்.
அணி விவரம்:
இந்தியா அணி: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), யஜ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர்.அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் ஹூடா.
நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), கோலின் ஆக்கர்மேன், டாம் கூப்பர், பாஸ் டி லீட், பிராண்டன் குளோவர், பிரெட் கிளாஸன், ஸ்டீபன் மைபர்க், தேஜா நிடமனரு, மேக்ஸ் ஓ தாவுத், டிம் பிரிங்கிள், ஷரிஸ் அகமது, லோகன் வான் பீக், டிம் வாண்டெர் மெர்வ், பால் வான் மீகரன், விக்ரம்ஜித் சிங்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -