IND VS ENG 3rd Test : 434 ரன்கள் வித்தியாசம்! இங்கிலாந்தை வாரி சுருட்டி வீசிய இந்தியா! மிரட்டல் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Continues below advertisement

 

இந்திய அணி அபார வெற்றி:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Continues below advertisement

அதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதில் 196 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 131 ரன்கள் குவித்தார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா  225 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 112 ரன்களை குவித்தார். இவ்வாறாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களை குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்151 பந்துகள் களத்தில் நின்று 23 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 153 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் டாம் ஹார்ட்லியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் தன்னுடைய 500-வது விக்கெட்டை எடுத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அசத்திய ரோகித் படை:

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இதில் இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ரோகித் சர்மா 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்படி, அதிரடியாக விளையாடிவந்த சுப்மன் கில் அரைசதம் விளாசினார். 151 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 91 ரன்களை விளாசி ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

பின்னர் வந்த ரஜத் படிதர் டக் அவுட் ஆகி வெளியேற குல்தீப் யாதவ் 17 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த யஜஸ்வி ஜெய்ஸ்வாலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சர்பராஸ் கான். அதன்படி கடைசி வரை களத்தில் நின்றனர் இருவரும். இதில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக இரட்டை சதம் விளாசினார். 236 பந்துகள் களத்தில் நின்ற அவர் 14 பவுண்டரிகள் 12 சிக்ஸர்கள் என மொத்தம் 214 ரன்களை குவித்தார். அதேபோல், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுக்க 430 ரன்களில் இந்திய அணி டிக்ளர் செய்தது.

இச்சூழலில் 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்பரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க இங்கிலாந்து அணி 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவ்வாறாக இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

 

மேலும் படிக்க: India vs England 3rd Test: தவறான புரிதலால் அவுட் ஆவது சகஜம்தான் - ரன் அவுட் குறித்து பேசிய சர்ஃபராஸ் கான்!

 

மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: அதிரடியாக சதம் விளாசிய பென் டக்கெட்! தடுமாறிய இந்திய பவுலிங்! பேட்டிங்கில் மிரட்டும் இங்கிலாந்து!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola