இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைரதபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சின் சராசரி 404 ரன்கள் என்பதால் இமாலய ரன்களை குவிக்கும் எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்கியது.


இங்கிலாந்தை சுருட்டிய இந்திய சுழல்:


ஆனால், இங்கிலாந்தின் கனவை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சுக்குநூறாக்கினர். இந்த மைதானத்தில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் நேற்றைய போட்டியிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அவர்களது சுழல் மாயாஜாலத்தால் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆனாலும், இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.


நினைக்கவே இல்லை:


அந்த அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆடிய பென் டக்கெட் இந்திய அணியின் பந்துவீச்சு தொடர்பாக பேசியுள்ளார். அவர் பேசியுள்ளதாவது, “ நாங்கள் இன்னும் 3 அல்லது 4 விக்கெட்டுகளை எடுத்திருக்கலாம். அது மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். அவர்கள் விளையாடிய விதம் நேர்மறையாக இருந்தது. அது அவர்களுக்கு நியாயமான ஆட்டம். அவர்கள் அப்படி இறங்கி வந்து ஆடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.”


இவ்வாறு அவர் கூறினார்.


அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்:


இங்கிலாந்து அணியினர் மிகவும் தடுமாறிய நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் பதட்டமின்றி ஆடினர். கேப்டன் ரோகித்சர்மா 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், இளம் வீரரான ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டி போல ஆடினார். சுப்மன்கில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 23 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 76 ரன்களுடனும், சுப்மன்கில் 43 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


இந்திய அணியினர் இதேபோல ஆடினால் நிச்சயம் முதல் இன்னிங்சில் வலுவான ஸ்கோரை குவிக்க இயலும். நேற்றே இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் தவிர மார்க் வுட், டார் ஹார்ட்லி, ஜேக் லீச், ரெஹன் அகமது ஆகியோர் பந்து வீசினர். மைதானத்தில் சுழலின் தாக்கம் அதிகளவு இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார்.


இந்திய அணியிலும் பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்ற விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்‌ஷர் படேல் வீழ்த்தினர்.


மேலும் படிக்க: Virat Kohli: ஐசிசி விருது... நான்காவது முறையாக தட்டிச் சென்ற 'ரன் மிஷின்' விராட் கோலி!


மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் - ஜடேஜா... 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!