Ind vs Ban weather report : மழை வருமா வராதா? இந்தியா vs வங்கதேசம்! ஷாக் கொடுத்த வானிலை அறிக்கை

Ind vs Ban : துபாயில் உள்ள ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவை, பேட்ஸ்மேன்களும் விரைவாக ரன்கள் எடுக்க முடியும்.

Continues below advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரைத் தொடரில் இந்திய வங்கதேசத்தை இன்று எதிர்க்கொள்ள உள்ளது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது, இந்த நிலையில் துபாயில் உள்ள வானிலை நிலவரம் என்ன என்பதை அறியலாம். 

Continues below advertisement

இந்தியா vs வங்கதேசம்:

கிரிக்கெட் உலகின் மிகவும் முக்கிய போட்டிகளில் ஒன்றான சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி  தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. சமீப காலங்களில், வங்கதேச அணி இந்தியாவின் கடுமையான போட்டியாளராக அறியப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

சவால் அளிக்கும் வங்கதேசம்:

சமீபத்திய ஐ.சி.சி போட்டிகளில் வங்கதேசம் இந்திய அணிக்கு பலமுறை கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில், வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹசன் சாண்டோ மற்றும் மெஹிடி ஹசன் மிராஜ், இந்திய அணிக்கு ஆபத்தானவர்களாக இருக்கக்கூடிய இரண்டு வீரர்கள். இந்த இரண்டு வீரர்களும் எந்த நேரத்திலும் போட்டியின் போக்கையே மாற்ற முடியும். மெஹிடி ஹசன் மிராஸ் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அற்புதமாக செயல்பட்டால், இந்திய அணியின் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். இது தவிர, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களின் உதவியுடன் வங்கதேச அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம். 

மழை வருமா? 

போட்டி நடைப்பெறும் துபாயில் இன்று(20.02.2025) இன்று லேசான வெயில் இருக்கும் என்றும் அங்கு மழை பெய்ய 25 சதவீதிம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வானம் மேகமூட்டனாக காணப்படும் என்று காற்றின் ஈரப்பதம் சுமார் 39% ஆக இருக்கும். துபாயின் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தாலும்,  போட்டி முழுவதும் மழையால் முழுவதும் பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

துபாயில் உள்ள ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவை, பேட்ஸ்மேன்களும் விரைவாக ரன்கள் எடுக்க முடியும். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளில் இரண்டு புதிய ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்திலேயே உதவி கிடைக்கும், அதே நேரத்தில் மிடில் ர ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும். இது இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கலாம்.

இதையும் படிங்க: Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!

இந்தியா உத்தேச XI

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்

வங்கதேசம் உத்தேச XI

சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி அனிக் (கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், நஹித் ராணா. 

Continues below advertisement