Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Ind vs Ban : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்க்கொள்ளவுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி இன்று தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்க்கொள்ளவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நேற்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்க்கொள்ளவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகிறது.
இந்திய அணி:
இந்திய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து தொடரை வென்ற நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது. ஃபார்மில் இல்லாமல் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், ராகுல் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாண்டனர், பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது, ஆனால் முகமது சமி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக இந்திய அணி உள்ளது ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரை கொண்டுள்ளது. துபாய் மைதானத்தை பொறுத்த வரை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும் ஆனால் சமீபத்தில் அங்கு நடந்த ILT T20 தொடரில் பயன்ப்படுத்தப்பட்ட ஆடுகளங்களே பயன்ப்படுத்தப்படவுள்ளது.
இந்திய அணி நிச்சயமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை மிஸ் செய்யும். அவர் இல்லாத நிலையில் இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சவால் அளிக்கும் வங்கதேசம்:
சமீபத்திய ஐ.சி.சி போட்டிகளில் வங்கதேசம் இந்திய அணிக்கு பலமுறை கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில், வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹசன் சாண்டோ மற்றும் மெஹிடி ஹசன் மிராஜ், இந்திய அணிக்கு ஆபத்தானவர்களாக இருக்கக்கூடிய இரண்டு வீரர்கள். இந்த இரண்டு வீரர்களும் எந்த நேரத்திலும் போட்டியின் போக்கையே மாற்ற முடியும். மெஹிடி ஹசன் மிராஸ் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அற்புதமாக செயல்பட்டால், இந்திய அணியின் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். இது தவிர, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களின் உதவியுடன் வங்கதேச அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.
நேருக்கு நேர்:
இந்தியா அணி இது வரை வங்கதேச அணிக்கு எதிராக 41 போட்டிகளில் விளையாடி 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எட்டு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் வங்கதேச அணியின் கையே ஓங்கி உள்ளது. வங்கதேச அணி மூன்றில் வெற்றியும் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்
துபாய் சர்வதேச மைதானத்தில் உள்ள ஆடுகளம் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முறை, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ஆட்டத்தின் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் சற்று ஒத்துழைக்க வாய்ப்புகள் உள்ளதுசில உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Champions trophy 2025: முதல் போட்டியில் தட்டி தூக்கிய சாண்ட்னர் படை.. வீழ்ந்தது பாகிஸ்தான்!
இந்தியா vs வங்கதேசம்: எங்கு பார்க்க வேண்டும்
ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18
நேரடி ஒளிபரப்பு: ஜியோஹாட்ஸ்டார்
இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு துவங்க உள்ளது.
இந்தியா உத்தேச XI
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்
வங்கதேசம் உத்தேச XI
சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி அனிக் (கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், நஹித் ராணா