இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மகுடத்திற்காக மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஸ்மித் அபார சதம்:
76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட் – ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி சதமடித்தனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களை குவித்தார். இது ஸ்டீவ் ஸ்மித்தின் 31வது சதம் ஆகும்.
ஸ்டீவ் ஸ்மித் இந்த சதத்தின் மூலம் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். இந்த டெஸ்ட் சதத்தின் அவர் சுனில் கவாஸ்கர், விராட்கோலி, ரிக்கி பாண்டிங் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையே இதுவரை நடைபெற்ற டெஸ்ட் மோதல் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
சச்சினுக்கு அடுத்து ஸ்மித்:
இதுவரை இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் சச்சின் டெண்டுல்கர் 11 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 9 சதங்களுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுனில் கவாஸ்கர், விராட்கோலி, ரிக்கி பாண்டிங் தலா 8 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளனர். இதற்கு முன்பு இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இன்றைய சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய 3வது வீரர் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளார்.
தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் அசத்தலாக பேட் செய்து வரும் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் உலகின் தலைசிறந்த வீரராக உலா வருகிறார். ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 97 போட்டிகளில் ஆடி 31 சதங்கள் 4 இரட்டை சதங்கள் மற்றும் 37 அரைசதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 8 ஆயிரத்து 913 ரன்கள் எடுத்துள்ளார்.
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான இந்த மோதலில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் 6வது விக்கெட்டாக ஸ்டீவ் ஸ்மித் வெளியேறினார். அவர் களத்தில் இருந்த வரை ஆஸ்திரேலிய அணி 500 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலிய 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மேலும் படிக்க: IND vs AUS WTC Final 2023: இரண்டாவது நாளில் கம்பேக் கொடுத்த இந்தியா.. முதல் இன்னிங்ஸில் 469 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்..!
மேலும் படிக்க: Steve Smith Century: டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது சதம்.. ஹைடனை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்த ஸ்மித்..!