IND vs AUS LIVE Score: அபாரம்.. ஆஸ்திரேலியாவுக்கு பரிதாபம்! இந்தியா மிரட்டல் வெற்றி
India vs Australia Live Score, World Cup 2023: இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி குறித்து அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
உலகக் கோப்பை 2023 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கே.எல் ராகுல்
1. ஷிகர் தவான் - 2019 - 117 ரன்கள்
2. அஜய் ஜடேஜா - 1999 - 100 ரன்கள்
3. கே.எல். ராகுல் - 2023 - 97 ரன்கள்
ஐசிசி நடத்தக்கூடிய டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் போட்டி என அனைத்திலும் சேர்த்து விராட் கோலி தற்போது 2 ஆயிரத்து 785 ரன்கள் விளாசியுள்ளார். இது சச்சின் இதற்கு முன்னர் படைத்திருந்த சாதனையான 2 ஆயிரத்து 719 ரன்களை முறியடித்துள்ளார்.
விராட் கோலி தனது சதத்தை தவற விட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இல்லாமல் அதிக அரைசதங்கள் விளாசியவர் என்ற பட்டியலில் விராட்கோலிதான் முதல் இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 113 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
தொடர்ந்து 4 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அதாவது 2007 முதல் 2023 வரை தனது முதல் போட்டியில் வெற்றியுடந்தான் தொடங்கியுள்ளது.
இரு அணிகளும் தங்களது முதல் சிக்ஸரை 40வது ஓவரில்தான் அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் சிக்ஸரை பேட் கம்மின்ஸும் இந்திய அணியின் சிக்ஸரை ஹர்திக் பாண்டியாவும் விளாசினர்.
இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தம் 5 சிக்ஸர்கள்தான் விளாசியுள்ளன. இதில் இந்தியா 3 சிக்ஸர்களும் ஆஸ்திரேலியா 2 சிக்ஸர்களும் விளாசியுள்ளன.
இரு அணிகளும் இணைந்து இந்த போட்டியில் மொத்தம் 400 ரன்கள்தான் எடுத்தது. அதில் 30 பவுண்டரிகள் இரு அணிகளும் இணைந்து விளாசியுள்ளன. ஆஸ்திரேலியா 16 பவுண்டரிகளும் இந்தியா 14 பவுண்டரிகளும் விளாசியுள்ளன.
இறுதிவரை களத்தில் இருந்த கேல்.எல். ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி 97 ரன்கள் எடுத்து சதத்தை 3 ரன்களில் நழுவவிட்டார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதாவது 2003 தொடரில் இருந்து முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது கிடையாது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பைத் தொடரினை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஆஸ்திரேலியாவின் நீண்ட கால வரலாறு மாறியுள்ளது.
இக்கட்டடான சூழலில் களமிறங்கி பொறுப்புடன் விளையாடி இறுதி வரை களத்தில் இருந்த கே.எல். ராகுல் 97 ரன்கள் எடுத்து சதத்தினை நழுவவிட்டார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் - விராட்கோலியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
40வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் 41வது ஓவரில் கே.எல். ராகுல் சிக்ஸர்கள் பறக்கவிட்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.
சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஹசில்வுட் பந்து வீச்சில் 38வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 33 ஆயிரத்து 190 ரசிகர்கள் போட்டியை நேரில் காண வந்துள்ளனர்.
இக்கட்டான சூழலில் இருந்து அணியை மீட்டு வரும் விராட் கோலி 85 ரன்கள் சேர்த்து சதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.
36 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா வெற்றி பெற 14 ஓவர்களில் 41 ரன்கள் தேவை.
203 பந்துகளில் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் கூட்டணி 150 ரன்கள் விளாசியுள்ளது. இருவரும் இணைந்து தலா 6 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
34.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 50 ரன்கள் தேவை.
34 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது.
போட்டியின் 34வது ஓவரின் 4வது பந்தை ஆக்ரோசமாக வீசப்பட்ட பந்து விராட் கோலியின் ஹெல்மெட்டில் பட்டதால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
200 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 80 ரன்கள் தேவை.
29 ஓவரகள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி இதுவரை 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்து வெற்றியை எட்டும் முனைப்பில் விளையாடி வருகிறது.
போட்டியின் 28வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய நோ-பாலுக்கான ப்ரீ கிட்டில் விராட் கோலி பவுண்டரி விளாசியுள்ளார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய கே எல் ராகுல் 71 பந்தில் அரைசதம் விளாசி பொறுப்புடன் விளையாடி வருகிறார்.
இந்திய அணி வெற்றி பெற 23 ஓவர்களில் 95 ரன்கள் தேவை. தற்போது இந்திய அணி 27 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 105 ரன்கள் சேர்த்துள்ளது.
விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் கூட்டணி 146 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்துள்ளது.
26 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணி 25.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டி சிறப்பாக விளையாடி வருகிறது.
பொறுப்புடனும் சிறப்பாகவும் விளையாடி வரும் விராட் கோலி 75 பந்துகளில் அரைசதம் விளாசி தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர். விராட் கோலி 48 ரன்னிலும் ராகுல் 46 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 87 ரன்கள் சேர்த்துள்ளது.
21 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா வெற்றி பெற 30 ஓவர்களில் 120 ரன்கள் தேவை.
விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் கூட்டணி 100 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்கள் சேர்த்துள்ளது.
18.1 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 18வது ஓவரை வீசிய ஆடம் ஜம்பாவின் ஓவரில் கே.எல். ராகுல் 3 பவுண்டரிகள் பறக்கவிட்டு மிரட்டியுள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்துள்ளது.
பொறுப்பாக விளையாடி வரும் விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் கூட்டணி 50 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடி வருகின்றன.
15.2 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி மிரட்டியுள்ளார்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி தற்போது வரை 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகிறது.
14 ஓவரகள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 12வது ஓவரை மேக்ஸ் வெல் வீச வந்துள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது.
8 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 8வது ஓவரில் விராட் கோலி கொடுத்த கேட்சினை மார்ஷ் தவறவிட்டார்.
இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் நிலையில், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் கூட்டணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகின்றனர்.
டாப் ஆர்டட் பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட் ஆன நிலையில் 5 ஓவர்கள் முடிவில் 12 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் முதல் பவுண்டரியை கே.எல். ராகுல் அடித்துள்ளார்.
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர்.
4வது வீரராக களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயரும் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.
இந்தியா அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா ரன் ஏதும் அடிக்காமல் ஹசல்வுட் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
உலகக் கோப்பையில் மிட்ஷெல் ஸ்டார் தனது 50வது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான இஷான் கிஷான் தான் எதிர் கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணியின் முதல் ஓவரை மிட்ஷெல் ஸ்டார்க் வீசிவருகிறார். இவர் உலகக் கோப்பையில் இதுவரை 49 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்ததே இல்லை என்பது கடந்த கால வரலாறாக உள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோற்றதாக வரலாறே கிடையாது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றால் முதல் தோல்வியாக பதிவாகும்.
இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டினையும் இழந்து விடக்கூடாது என நினைத்து பொறுமையாக பேட்டிங் செய்து வந்த ஆடம் ஜாம்பா 49வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்தார்.
48 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் சேர்த்துள்ளது.
45 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்துள்ளது.
பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கம்மின்ஸ் தனது விக்கெட்டினை பும்ரா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
41 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகிறது.
போட்டியின் 40வது ஓவரில் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் முதல் சிக்ஸரை விளாசினார்.
போட்டியின் 40வது ஓவரை வீசி வரும் குல்தீப் யாதவிற்கு 10வது ஓவராகும். இவர் இதுவரை இரண்டு விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
போட்டியின் 37வது ஓவரை வீசிய அஸ்வின் அந்த ஓவரில் ஒரு விக்கெட் கைப்பற்றியது மட்டும் இல்லாமல், ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக வீசினார்.
அஸ்வின் வீசிய 37வது ஓவரில் கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அவர் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். அவர் தனது விக்கெட்டினை 15 ரன்கள் சேர்த்திருந்தார்.
35 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக நீல நிற ஜெர்சி அணிந்து ரசிகர்கள் குவிந்துள்ளதால், மைதானம் முழுவதும் நீல நிறமாக காட்சி அளிக்கிறது.
25வது ஓவரில் 100 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா அணி 33 வது ஓவர் வரை மொத்தம் 131 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. தற்போது வரை மொத்தம் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னர் நடைபெற்ற ஆடுகள ரிவ்யூவிற்குப் பின்னர் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஜடேஜாவிற்கு சிறப்பான நாளாக அமையும் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டியில் ஜடேஜா இதுவரை 6 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.
போட்டியின் 30வது ஓவரில் ஜடேஜா லபுசேன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது விக்கெட்டினை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் கேரி தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினையும் ஜடேஜா கைப்பற்றினார்.
சிறப்பாக விளையாடி வந்த லபுசேனே தனது விக்கெட்டினை ஜடேஜா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
28 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை 112 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் நோக்கி விளையாடி வந்த ஸ்மித் 71 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா அணி 21வது ஓவரில் இருந்து இன்னும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதனால் மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமில்லாமல் உள்ளனர்.
25 ஒவர்களில் ஆஸ்திரேலியா தரப்பில் இதுவரை 12 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது. இதுவரை ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி 25 ஓவர்கள் பேட்டிங் செய்து 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ஸ்மித் 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார்.
25வது ஓவரின் முதல் பந்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து மந்தமாக விளையாடி வருகிறது.
24 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் தற்போதைய ரன்ரேட் 4.08ஆக உள்ளது.
23 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 23வது ஓவரின் இரண்டாவது பந்தில் 90 ரன்களை எட்டியுள்ளது.
போட்டியின் 23வது ஓவரை வீச இந்திய அணி தரப்பில் இருந்து முகமது சிராஜ் வந்துள்ளார்.
22 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டினை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி தரப்பில் உள்ள மூன்றாவது முழு நேர சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா போட்டியின் 20வது ஓவரை வீசி வருகிறார்.
வார்னர் தனது விக்கெடினை இழந்த பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நான்காவது வீரராக லபுசேன் களமிறங்கியுள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்துள்ளது.
52 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த வார்னர் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்திய அணி அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்கள் பந்து வீச வைத்து ஆஸ்திரேலிய அணிக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னையில் அதிகப்படியாக வெயில் அடித்து வருவதால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய சிரமப் படுகின்றனர்.
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 71 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி இதுவரை 13 ஓவர்கள் பந்து வீசியுள்ளது. இதற்காக 5 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா இதுவரை ஒரு விக்கெட்டினை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் ஸ்மித் கூட்டணி 61 பந்தில் 52 ரன்கள் சேர்த்து சிற்ப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி வருகின்றனர்.
போட்டியின் 13வது ஓவரை வீச இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் வந்துள்ளார்.
இதுவரை 11 ஓவரகள் பந்து வீசியுள்ள இந்தியா, இதுவரை ஒரு எக்ஸ்ட்ரா கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறது.
பவர்ப்ளே முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 43 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 10வது ஓவரை வீசுவதற்காக அஸ்வின் வந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 9 ஓவரகள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 36 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது.
போட்டியின் 8வது ஓவரை அஸ்வின் வீசி வருகிறார்.
7வது ஓவரின் இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறவது பந்தில் ஆஸ்திரேலிய அணி பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தியுள்ளது. அந்த அணி தற்போது ஒரு விக்கெட்டினை இழந்து 29 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசையில் உருவான கதிஜா பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஆரவாரத்தில் மூழ்கினர்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு வலது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு முதலுதவி செய்து வருகின்றனர்.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் 1001 ரன்கள் சேர்த்து ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இவர் 19 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
போட்டியின் முதல் 6 ஓவரை பும்ரா மற்றும் சிராஜ் மாறி மாறி வீச, 7வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசி வருகிறார்.
போட்டியின் 6வது ஓவரை வீசிய சிராஜ் அதனை மெய்டன் ஓவராக வீசியுள்ளார். இந்த ஓவரை அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் எதிர்கொண்டார்.
5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 15 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது.
இந்திய அணிக்காக ஐசிசி உலகக் கோப்பையில் அதிக கேட்சுகள் (15) பிடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்த சாதனை விக்கெட் கீப்பர் இல்லாமல் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ் தனது விக்கெட்டினை இழந்த பின்னர், ஸ்மித் களமிறங்கியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரடியாகக் காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர்.
மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்ஷெல் மார்ஷ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் வார்னர் போட்டியின் முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்ஷெல் மார்ஸ் தொடங்கியுள்ளனர்.
இந்திய அணியின் பவுலிங் இன்னிங்ஸை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் ஓவரை வீசி தொடங்கியுள்ளார்.
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இரு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வணக்கம்! 2023 உலகக் கோப்பையின் ஐந்தாவது போட்டி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி தொடர்பான நேரடி அறிவிப்புகளை இங்கே படிக்கலாம். இந்த உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்களது முதல் போட்டியில் முதல் முறையாக களம் இறங்குகின்றன.
Background
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்த மைதானம் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை கங்காரு அணி மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த 6 போட்டிகளில், மூன்று போட்டிகள் 1987 மற்றும் 1996 உலகக் கோப்பையின் போது விளையாடப்பட்டன. மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இங்கே 1987 உலகக் கோப்பையில், இந்த அணியும் இந்தியாவிடம் குரூப் ஸ்டேஜில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் தோல்வியைக் கொடுத்தது.
மாறாக, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த சொந்த மைதானத்தில் இந்தியாவுக்கு அதிக நன்மை கிடைக்கவில்லை. இந்த மைதானத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 7ல் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. இங்கு இந்தியா விளையாடிய போட்டி ஒன்றில் முடிவு இல்லை. அதாவது இங்கு இந்தியாவின் வெற்றி சதவீதம் 50 ஆக மட்டுமே உள்ளது, இது ஆஸ்திரேலியாவின் 83% வெற்றியை விட மிகக் குறைவு. இந்தநிலையில், இந்தியா மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -