TAHDCO SUY Scheme Details: தூய்மை பணியாளர்களுக்கான தொழில்முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


தூய்மை பணியாளர்களுக்கான தொழில்முனைவோர் திட்டம்:


தூய்மை பணியாளர்களுக்கான தொழில்முனைவோர் திட்டம் என்பது பொதுத் தனியார் கூட்டாண்மை முறையில் (பிபிபி) சமூகக் கழிப்பறைகளைக் கட்டுதல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் சுகாதாரம் தொடர்பான வாகனங்களை வாங்குதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான நிதி உதவியை விரிவுபடுத்துவதாகும். இத்திட்டம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  துப்புரவு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குதல் ஆகிய இரட்டை நோக்கங்களை இந்த திட்டம் கொண்டுள்ளது. தூய்மைப் பணிகளுக்கான வாகனங்களை கொள்முதல் செய்யவும், இயக்கவும் இந்த திட்டம் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.



திட்டத்தின் இலக்கு:


1. பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகளைத் தட்டியெழுப்பி பொருத்தமான உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
2. குப்பைகள் உருவாகும் இடத்திலிருந்தே அவற்றை சேகரிப்பதற்கான வசதியை உருவாக்குதல்
3. பொது இடங்களை பெருக்குவது, குப்பைகளை அகற்றுவது மற்றும் மனிதக் கழிவுகளை கைகளாலேயே அகற்றும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பது


விண்ணபிக்க தகுதி:


கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த பொது இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்பவர்கள், குப்பைகளை அகற்றுபவர்கள் மற்றும் மனிதக் கழிவுகளை கைகளாலேயே அகற்றும் தொழிலாளர்கள் இத்திட்டத்திற்கு விண்ணபித்து பயனடையலாம்.


இதையும் படியுங்கள்: Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?


கடன் தொகை:


தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சமும், கூட்டு முயற்சி தொழிலுக்கு ரூ.40 லட்சம் வரையிலும் விதிகளுக்கு உட்பட்டு கடன் வழங்கப்படும். பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 4 சதவிகிதத்திற்கு மேல் வட்டி விதிக்கப்படாது. பெண் பயனாளிகளுக்கு வட்டியில் ஆண்டுக்கு 1 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும். சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பயனாளிகளுக்கு 0.5% தள்ளுபடி நீட்டிக்கப்படும். கைகளால் தூய்மைப் பணி செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் (SRMS), பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3.25 லட்சம் மானியம் வழங்கப்படும். 


அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு https://tahdco.com/nskfdc-swachhta-udyami-yojana.php


திருப்பி செலுத்த கால அவகாசம்:


10 ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். கடன் தொகை வழங்கப்பட்ட மூன்று மாதத்திலிருந்து, 6 மாதங்கள் கூடுதல் அவகாசமும் வழங்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை:


உங்கள் பகுதியில் உள்ள டாட்கோ வங்கியை நேரில் அணுகு கூடுதல் விவரங்களை பெறலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.


தேவைப்படும் ஆவணங்கள்:



  • ஆதார் அட்டை

  • ஓட்டுனர் உரிமம்

  • வங்கி விவரங்கள்

  • சாதிச் சான்றிதழ்

  • வருமானச் சான்றிதழ்

  • வசிப்பிடச் சான்றிதழ்


தொழில்முனைவோர் ஆக விருப்பமும், திட்டமும் உள்ள தகுதியான நபர்கள், தூய்மை பணியாளர்களுக்கான தொழில்முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.