டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இந்தியா  - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


கே.எல்.ராகுல் அபார கேட்ச்:


இந்த போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பேட் செய்த கொண்டிருந்த உஸ்மான் கவாஜாவை 81 ரன்களில் ஜடேஜா அவுட்டாக்கினார். அவரது பந்தில் கவாஜா அடித்த பந்தை பாயிண்ட் திசையில் நின்றிருந்த கே.எல்.ராகுல் அபாரமாக பாய்ந்து ஒற்றைக் கையில் பிடித்து அசத்தினார். கே.எல்.ராகுலின் அபார கேட்ச்சால் கவாஜா சோகத்துடன் வெளியேறினார். அவர் நின்றிருந்தால் கட்டாயம் சதமடிக்க வாய்ப்பு இருந்தது.






அபாரமாக கேட்ச் பிடித்த கே.எல்.ராகுலை இந்திய வீரர்கள் பாராட்டினர். கே.எல்.ராகுல் பிடித்த இந்த கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கவாஜா மட்டும் களத்தில் நிலைத்து நின்று ஆட, தொடக்க வீரர் வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, லபுசேனே 18 ரன்களில் அவுட்டாக, ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாகினார். ட்ராவிஸ் ஹெட்டும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஹேண்ட்ஸ்கோம்புடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கவாஜா ஆஸ்திரேலிய அணி 167 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார்.


சாதனைகள்:


இந்த போட்டியில் அஸ்வின், ஜடேஜா பல்வேறு சாதனைகளை படைத்தனர். அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 100 விக்கெட்டுகளை கைப்ற்றிய வீரர் என்ற சாதனையையும், ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்தனர்.


இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது முன்னணி வரிசையில் கவாஜா 81 ரன்களை குவித்து காப்பாற்றியபோது போல, கடைசி கட்டத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாட் கம்மின்ஸ் 33 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 


மேலும் படிக்க: Ashwin Test Wickets: கும்ப்ளேவுடன் இணைந்த அஸ்வின்..! ஆஸி.க்கு எதிராக மட்டும் 100 விக்கெட்டுகள்..!


மேலும் படிக்க: Watch Video: இந்திய வீரர்களை பார்க்க ஆர்வத்தில் நுழைந்த ரசிகர்.. தரதரவென இழுத்துத்தாக்கிய பாதுகாப்பு வீரர்கள்!