இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் நடுவே இந்திய ரசிகர் உள்ளே புகுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிபெற ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சேட்டேஷ்வர் புஜாரா, அணிக்காக தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சதம் அடித்து கொண்டாடுவார் என்ற நம்பிக்கையில் களமிறங்கியுள்ளார். 


நாக்பூரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பினார். ஆனால் இவர்களது வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதையடுத்து, கே.எல் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். 


இந்த நிலையில், எங்கு எப்போது போட்டிகள் நடந்தாலும் பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முயற்சிப்பது பொதுவாக நடக்கும் செயல். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஒரு இந்திய ரசிகர் ஒருவர் திடீரென போட்டியின்நடுவே உள்ளே சென்றார். இதனால்,  பாதுகாப்பு வீரர்கள் அந்த ரசிகரை தடுத்து நிறுத்தினார்கள்.






இருப்பினும், அந்த ரசிகர் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்ததால் ஆத்திரமடைந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை தாக்கி இழுத்து சென்றனர். இந்தியா உள்பட பல நாடுகளின் மைதானங்களில் இரு நாட்டு வீரர்கள் விளையாடும்போது, அந்நாட்டு ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுக்க விரும்புவர். அதிலும், ஒரு சில தீவிர ரசிகர்கள் கால்களை தொட்டும், கைகுலுக்கவும் விரும்புவர். இப்படி ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஊடங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக தங்களுக்கு பிடித்த வீரர்களை முத்தமிடுவர்.  


இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.


ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), டாட் மர்பி, நாதன் லியான், மேத்யூ குஹ்னெமன்