IND vs AUS 1st T20 LIVE: மேத்யூ வேட் அசத்தல்.. 209 ரன்களை சேஸ் செய்து அசத்திய ஆஸி..

IND vs AUS 1st T20 LIVE Updates: இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியின் உடனுக்குடன் தகவல்கள் இதோ...

அசோக் மூ Last Updated: 20 Sep 2022 11:02 PM
IND vs AUS 1st T20 LIVE: மேத்யூ வேட் அசத்தல்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸி..

மேத்யூ வேட் அசத்தலால் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: 3வது விக்கெட்டை எடுத்த அக்சர்

ஆஸ்திரேலிய அணியின் ஜான் இங்லிஸ் விக்கெட்டை அக்சர் பட்டேல் வீழ்த்தினார்.

IND vs AUS 1st T20 LIVE: 14 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 145/4

14 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs AUS 1st T20 LIVE: ஒரே ரன்னில் ஆட்டமிழந்து மேக்ஸ்வேல் பெவிலியன் திரும்பினார்..

ஆஸ்திரேலிய அணியின் வீரர் மேக்ஸ்வேல் 1 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IND vs AUS 1st T20 LIVE: அரைசதம் எடுத்து அசத்திய கேமரூன் க்ரீன்..அக்சர் பந்துவீச்சில் அவுட்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs AUS 1st T20 LIVE: 10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 109/1

10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

அக்‌ஷர் படேல் சுழலில் ஆரோன் பிஞ்ச் அவுட்..!

அக்‌ஷர் படேல் சுழலில் ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

உமேஷ் யாதவ் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள்

உமேஷ்யாதவ் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் தொடர்ந்து 4 பந்துகள் பவுண்டரி விளாசி ஆஸ்திரேலிய தொடக்க வீரர் கிரீன் அசத்தினார். 

IND vs AUS 1st T20 LIVE: 20 ஓவர்களில் இந்தியா 208/6

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 208 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: 20 ஓவர்களில் இந்தியா 208/6

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 208 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: அரைசதம் விளாசிய ஹர்திக் பாண்ட்யா..

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

IND vs AUS 1st T20 LIVE: 5 ரன்களில் ஆட்டமிழந்த தினேஷ் கார்த்திக்..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs AUS 1st T20 LIVE: சூர்யகுமார் யாதவ் 46 ரன்களில் அவுட்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 46 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

IND vs AUS 1st T20 LIVE: 12 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 103/3

12 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: 55 ரன்களில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல்

இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

IND vs AUS 1st T20 LIVE: 10 ஓவர்களின் முடிவில் இந்தியா 86/2

10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: 8 ஓவர்களின் முடிவில் இந்தியா 69/2

8 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: 6 ஓவர்களின் முடிவில் இந்தியா 46/2

6 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: 5 ஓவர்களின் முடிவில் இந்தியா 35/2

5 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: 2 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 2 ரன்களில் ஜான் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

IND vs AUS 1st T20 LIVE: 11 ரன்களில் வெளியேறிய கேப்டன் ரோகித்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்கள் ஹேசல்வூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

IND vs AUS 1st T20 LIVE: 2 ஓவர்களின் முடிவில் இந்தியா 14/0

2 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: புதிய ஜெர்ஸியில் களமிறங்கியுள்ள இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்ஸியில் களமிறங்கியுள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: முதல் டி20 போட்டியில் விலகிய பும்ரா

இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா களமிறங்கவில்லை. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். 


அணி விவரம்:


 





IND vs AUS 1st T20 LIVE: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் அறிமுகம்....

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டிம் டேவிட் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்.

IND vs AUS 1st T20 LIVE: ஜெயிக்க போவது யாரு? தொடருக்கு முன்பாக வீடியோ வெளியிட்ட பிசிசிஐ

இந்தியா-ஆஸ்திரேலிய போட்டிக்கு முன்பாக வீடியோ வெளியிட்ட பிசிசிஐ:


 


 





IND vs AUS 1st T20 LIVE: சொந்த மண்ணில் இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 போட்டிகள்..

இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணி 4 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

IND vs AUS 1st T20 LIVE: டி20 போட்டிகளில் இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை..

இரு அணிகளுக்கும் இடையேயான சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி இதுவரை 13 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

IND vs AUS 1st T20 LIVE: ஆஸி. தொடரில் முகமது ஷமி விலகல்..

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

IND vs AUS 1st T20 LIVE: இந்தியா-ஆஸி. டி20 அட்டவணை:

இந்தியா- ஆஸ்திரேலியா தொடர்:


செப்டம்பர் 20- முதல் டி20 போட்டி


செப்டம்பர் 23- இரண்டாவது டி20 போட்டி


செப்டம்பர் 25- மூன்றாவது டி20 போட்டி

Background

ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு நாட்டு அணியின் வீரர்களும் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை அளித்துள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா டிம் டேவிட்டிற்கு இந்த தொடர் மூலம் டி20 தொடரில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது இருநாட்டு ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறியதற்கு பிறகு இந்தியா வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் களமிறங்கும். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு பலமாக இருக்கலாம். அதேபோல், வார்னரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணி அவருக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளது. 


ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறிய ஓய்விற்கு பிறகு களமிறங்குகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜிம்பாவே மற்றும் நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கவில்லை. கடைசியாக இவர் ஜூலையில் இலங்கையில் நடைபெற்ற தொடரில் பங்கேற்றார். அதன்பின்னர் சிறிய ஓய்வை எடுத்து வந்தார். இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய தொடரில் இவர் அணிக்கு திரும்பியுள்ளார். 


இந்தநிலையில் இரு அணிகளும் இந்த தொடரை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிலாம். டி 20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் இரு அணிகளும் இந்த தொடரை தங்களுக்கு சாதமாக்கி கொள்ள திட்டமிட்டுள்ளது. 


இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும், நேரலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும் காணலாம். 


டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 


இந்தியா அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் , புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா


ஆஸ்திரேலியா அணி விவரம்:


ஆரோன் பின்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.