IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

IND vs AFG 3rd T20 LIVE Score: இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 17 Jan 2024 11:21 PM
IND vs AFG 3rd T20 LIVE Score: இந்தியா வெற்றி

இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: களமிறங்கிய ஆஃப்கானுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரவி பிஷ்னாய் வீசிய இரண்டாவது சூப்பர் ஓவரின் முதல் பந்தில் முகமது நபி டக் அவுட் ஆகி வெளியேறினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்

சூப்பர் ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: இரண்டு விக்கெட்டுகளை இழந்த ரோகித்

ரோகித் சர்மா ரன் அவுட் ஆனதால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: ரிங்கு சிங் அவுட்

சூப்பர் ஓவரின் 4வது பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை இழந்துள்ளார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: முதல் பந்தே சிக்ஸர்

சூப்பர் ஓவரின் முதல் பந்தில் ரோகித் சிக்ஸருக்கு விளாசியுள்ளார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: களமிறங்கியது இந்தியா

இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் களமிறங்கியுள்ளனர். 

IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா; அடுத்த சூப்பர் ஓவருக்கு தயாராகும் அணிகள்

முதல் சூப்பர் ஓவரும் டிரா ஆனதால் அடுத்த சூப்பர் ஓவருக்கு அணிகள் தயாராகி வருகின்றன. 

IND vs AFG 3rd T20 LIVE Score: மீண்டும் போட்டி டிரா

சூப்பர் ஓவரில் போட்டி டிரா ஆனது. இதனால் அடுத்த சூப்பர் ஓவர் வீசப்படவுள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய ரோகித்

சூப்பர் ஓவரின் மூன்றாவது பந்தையும் நான்காவது பந்தையும் ரோகித் சர்மா சிக்ஸாருக்கு விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் 14ஆக உயர்ந்தது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: களமிறங்கிய இந்தியா

இந்திய அணி சார்பாக ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கியுள்ளனர். இந்தியாவுக்கு இலக்கு 17 ரன்கள். 

IND vs AFG 3rd T20 LIVE Score: 17 ரன்கள் இலக்கு

இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்கான் 16 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: மூன்றாவது பந்தில் பவுண்டரி

சூப்பர் ஓவரின் மூன்றாவது பந்தினை குர்பாஸ் பவுண்டரிக்கு விளாசியுள்ளார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: முதல் விக்கெட்டை இழந்த ஆஃப்கான்

ஆஃப்கான் அணியின் குல்பைதின் தனது விக்கெட்டினை ரன் அவுட் முறையில் இழந்து வெளியேறினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: சூப்பர் ஓவரை வீசும் முகேஷ் குமார்

சூப்பர் ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் வீசுகின்றார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: களமிறங்கிய ஆஃப்கான்

சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய ஆஃப்கான் அணி களமிறங்கியுள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: சூப்பர் ஓவர்

போட்டி டிராவில் முடிந்ததால் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: டிராவில் முடிந்த போட்டி

20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதனால் போட்டி டிரா ஆனது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: இரண்டாவது விக்கெட்டினை இழந்த ஆஃப்கான்

ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான இப்ராஹிம் தனது விக்கெட்டினை அரைசதம் விளாசிய நிலையில் இழந்து வெளியேறினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: 100 ரன்களைக் கடந்த ஆஃப்கான்

12.1 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: முதல் விக்கெட்டினை இழந்த ஆஃப்கான்

11 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 60 ரன்கள் குவித்த ஆஃப்கானிஸ்தான்

8 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றில் 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது

4 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 2 ஓவர்கள் முடிவில்

2 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: இலக்கை நோக்கி களமிறங்கியது ஆஃப்கான்

இந்திய அணி நிர்ணயித்த 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: கடைசி ஓவரில் மட்டும்..

இந்திய அணி கடைசி ஓவரில் மட்டும் 36 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் ரிங்கு சிங் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். ரோகித் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி ஒரு ரன் எடுத்தார். நோபால் வீசியதால் கூடுதலாக ஒரு வழங்கப்பட்டது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 213 ரன்கள் இலக்கு

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 213 ரன்கள் இலக்கு

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 200 ரன்களை எட்டிய இந்தியா

இந்திய அணி 19.4 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது

19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: அரைசதம் விளாசிய ரிங்கு சிங்

36 பந்துகளை எதிர்கொண்ட ரிங்கு சிங் 3 சிக்ஸர் 2 பவுண்டரி விளாசி தனது அரைசதத்தினை எட்டினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: ரோகித் சர்மா சதம் விளாசல்

64 பந்துகளில் ரோகித் சர்மா 10 பவுண்டரி 6 சிக்ஸர் விளாசி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: 90களில் ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 62 பந்துகளில் 95 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: 150 ரன்களைக் கடந்த இந்தியா

17.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது

17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 22 ரன்களை அள்ளிய இந்தியா

16வது ஓவரில் இந்திய அணி  22 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவர் முடிவில் இந்திய அணி 131 ரன்கள் சேர்த்தது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்

ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இணைந்து 66 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்துள்ளனர். 

IND vs AFG 3rd T20 LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது..

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 100 ரன்களைக் கடந்தது இந்தியா

இந்திய அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: அரைசதம் விளாசிய கேப்டன் ரோகித்

41 பந்துகளை எதிர்கொண்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 5 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசி அரைசதம் விளாசியுள்ளார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: 100 ரன்களை நெருங்கும் இந்தியா

இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 65 ரன்களை எட்டிய இந்தியா

11 ஓவர்கள் முடிவில் அதாவது 66 பந்துகளை எதிர்கொண்டுள்ள இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: முடிந்தது 10 ஓவர்கள்

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 30 ரன்கள் பார்ட்னர்ஷிப்

இந்திய அணியின் ரோகித சர்மா மற்றும் ரிங்கு சிங் கூட்டணி 27 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது

ஒன்பது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 50 ரன்களை எட்டிய இந்தியா

இந்திய அணி 8.4 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 50 ரன்களை நெருங்கும் இந்தியா

இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: முதல் சிக்ஸர் விளாசிய ரிங்கு

இந்தப் போட்டியின் முதல் சிக்ஸரையும் இந்திய அணியின் முதல் சிக்ஸரையும் ரிங்கு சிங் விளாசியுள்ளார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: கட்டுக்கோப்பாக பந்து வீசும் ஆஃப்கான்

7 ஓவர்கள் பந்து வீசியுள்ள ஆஃப்கான் அணி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி 34 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: முடிந்தது பவர்ப்ளே

முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: சரிவில் இருந்து மீளுமா இந்திய அணி

இந்தியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவதால் இந்திய அணி மீளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: வந்தார் சென்றார் சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் சஞ்சு சாம்சன் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: வந்தார் சென்றார் சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் சஞ்சு சாம்சன் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: ஷிவம் துபே அவுட்

இரண்டு விக்கெட் போனதும் களமிறங்கிய ஷிவம் துபே 4வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: நிதானத்தில் மூழ்கிய இந்தியா

அடுத்தடுத்து  விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி நிதான ஆட்டத்தினை கடைபிடித்து வருகின்றது. 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: மூன்று ஓவர்கள் முடிந்தது...

மூன்று ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: ஏமாற்றிய விராட்

விராட் கோலி தனது விக்கெட்டினை ரன் ஏதும் சேர்க்காமல் இழந்து வெளியேறினார். இது மைதானத்தில் கூடியிருந்த அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: களத்தில் விராட் - ரோகித்

முதல் விக்கெட் விழுந்ததால், களத்தில் ரோகித் மற்றும் விராட் உள்ளனர். 

IND vs AFG 3rd T20 LIVE Score: இந்த முறை ஏமாற்றிய ஜெய்ஸ்வால்

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 4 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

IND vs AFG 3rd T20 LIVE Score: முதல் பவுண்டரியை விளாசிய ரோகித்

இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் பவுண்டரியையும் இந்த தொடரின் தனது முதல் பவுண்டரியையும் விளாசினார். 

களமிறங்கியது இந்தியா; பறக்கும் பவுண்டரிகள்; திணறும் ஆஃப்கான் பவுலர்கள்

முதல் இரண்டு ஓவர்கள் முடிந்ததில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: முடிந்தது முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AFG 3rd T20 LIVE Score: தொடங்கியது போட்டி

இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி தொடங்கியது. 

Background

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தனது கடைசி டி20 போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இருப்பினும், இதற்குப் பிறகு, இந்திய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களே தவிர, எந்தவொரு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள்.


உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பு?


டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை நிர்ணயிக்க விரும்புகிறது. இந்திய அணிக்கு சரியான வீரர்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெவ்வேறு வீரர்கள் தொடர்ந்து உள்ளே களமிறக்குவது, உட்காரவைக்கப்படுவதுமாய் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த 11 பேரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்தக் கேள்வி இன்னும் உள்ளது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்றைய 3வது டி20 போட்டியில் இந்திய அணி தனது சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாட விரும்புகிறது. இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடும் 11-ஐ எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.


மூன்றாவது டி20 போட்டி பெங்களூரில்...


இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டி20யில் வெற்றி பெற்று தொடரில் ஆப்கானிஸ்தானை துடைத்தெறிய வேண்டும் என்று இந்திய அணி விரும்புகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி கிளீன் ஸ்வீப்பை தவிர்க்க விரும்புகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது போட்டி புதன்கிழமை (இன்று) பெங்களூரில் உள்ள என். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா..? 


மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் 11 பேரில் நிறைய மாற்றங்களை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.  இன்றைய போட்டியில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணிக்கு திரும்பலாம். அதன்படி,வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம். மேலும், முகேஷ் குமாருக்குப் பதிலாக அவேஷ் கானும், ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும் களமிறங்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்: 


இந்திய அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.


ஆப்கானிஸ்தான் அணி:


ரெஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.