இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவருரான கே.எல்.ராகுலும், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளுமாகிய அதியா ஷெட்டியும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர்.
அதியா ஷெட்டி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ’ஹீரோ’ என்ற இந்தி படம் மூலமாக 2015ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நியூயார்க்கில் திரைப்படம் தொடர்பான படிப்பை நிறைவு செய்தார். 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அதியா ஷெட்டி எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களது திருமணம் 2023 ஜனவரி 21 முதல் ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது.
ஏற்கெனவே அதியா ஷெட்டியின் தந்தையாகிய சுனில்ஷெட்டி கே.எல்.ராகுல் – அதியாஷெட்டியின் திருமணம் மும்பையில் உள்ள தனது இல்லத்திலே நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஏனென்றால், பாலிவுட் திரைப்பிரபலங்கள் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு தனது இல்லத்திலேயே திருமணத்தை நடத்த சுனில் ஷெட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
மேலும் முன்னதாக திருமணத்துக்கு கே.எல்.ராகுல் நீண்ட விடுப்பு கேட்டிருந்ததாகவும் பி.சி.சி.ஐ. அதற்கு அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. மணமக்களுக்கு பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கே.எல்.ராகுல் - அதியாஷெட்டி திருமணம் தொடர்பான தகவல்களுக்கு பதிலளித்த சுனில் ஷெட்டி, திருமணம் தொடர்பாக வரும் அனைத்து வதந்திகளும் எனக்குத் தெரியும். இருவரின் வேலை அட்டவணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரிசீலித்து வருகிறோம். எப்போது? எங்கே? திருமணம் நடைபெறும் என்பதை விரைவில் நாங்களே கூறுகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இருவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன. திருமணத்தின் காரணமாகவே கே.எல்.ராகுல் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Bigg Boss 6 Tamil: 'எங்கேயும் நல்லவங்க ஜெயிக்க முடியாது போல’.. அஸிம் வெற்றியை விமர்சித்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்!