சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்களன்று (23/01/2022) இந்த ஆண்டின் (2022) மகளிர் டி20 ஐ அணியை பெயரிட்டது, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ரிச்சா கோஷ் ஆகியோர் லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் நியூசிலாந்தின் சோ இ டிவைன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த மகளிர் அணி:
ஐசிசி அணியில் மூன்று இந்தியர்கள் உள்ளனர், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூன்று வீரராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் பேட்டிங் சூப்பர் ஸ்டார் ஸ்மிருதி மந்தனா, 33.00 சராசரி மற்றும் 133.48 ஸ்ட்ரைக் ரேட்டில் 594 ரன்களை எடுத்தார். கடந்த அக்டோபரில் இலங்கைக்கு எதிரான மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி உட்பட, அந்த ஆண்டில் 21 இன்னிங்ஸ்களில் ஐந்து அரை சதங்களை அவர் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா இந்த ஆண்டில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இது பெண்கள் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளரின் மூன்றாவது அதிகபட்ச பெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். இவரதுசராசரி 18.55, அதே நேரத்தில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பினை அணிக்கு தொடர்ந்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டில் நடந்த டி20 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. இவரது பேட்டிங் சராசரி 136.02 என்ற நிலையில் உள்ளது.
ரிச்சா கோஷ்:
இந்திய அணியின் இளம் வீராங்கானை ரிச்சா கோஷ்ஷின் இந்த ஆண்டுக்கான ஸ்டிரைக் ரேட் 150 க்கு மேல் உள்ளது. இவர் தான் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும், சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார் என்பதைக் கடந்து தனது பாணியில் விளையாடி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 18 போட்டிகளில், விக்கெட் கீப்பர்-பேட்டர் என 259 ரன்கள் எடுத்தார், இவர் விளாசிய 13 சிக்ஸர்கள் எதிரணிக்கு பயத்தினை ஏற்படு அளவிற்கு இருந்தது. ஆட்டம் இந்தியாவின் கையை விட்டு போய் விட்டது என இந்திய அணியே முடிவுக்கு வந்த தருணத்தில் எல்லாம், ”நான் இருக்கேன் பாஸ்” என ஆட்டத்தினை இந்திய அணிக்கு சதகமாக மாற்றி அசத்தினார்.
22 டி20 போட்டிகளில் 23.95 சராசரி மற்றும் 6.50 என்ற எக்கானமியுடன், ரேணுகா இந்திய அணிக்கு ஒரு சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்துள்ளார். ஐசிசியால் வழங்கப்படும் வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேணுகா என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணுகா:
ரேணுகா, கடந்த ஆண்டு முழுவதும் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஏழு டி20 போட்டிகளில் , எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அதகளப்படுத்தியிருந்தார். மேலும் காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் ஆசியா கோப்பை முழுவதும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக விளையாடினார். அவர் 11 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை, வெறும் 5.21 என்ற எக்கானமியுடன் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 டாட் பால்களை உள்ளடக்கிய 4/18 என்ற மிகச்சிறந்த ஸ்பெல் அவரது சிறந்த ஆட்டம் ஆகும்.
ஐசிசி மகளிர் டி20 ஐ ஆண்டின் சிறந்த அணி: ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), சோஃபி டெவின் (சி) (நியூசிலாந்து), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தஹிலா மெக்ராத் (ஆஸ்திரேலியா), நிடா தார் (பாகிஸ்தான்), தீப்தி ஷர்மா (இந்தியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), இனேகா ரணவீரா (இலங்கை) மற்றும் ரேணுகா சிங் (இந்தியா).