பிக்பாஸ் சீசன்  6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அஸிம் வெற்றியை முன்னாள் போட்டியாளராக காஜல் பசுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். 


பிக்பாஸ் சீசன் 6


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி,விக்ரமன் மற்றும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.






பிக்பாஸ் இறுதிப்போட்டி


இந்நிலையில் பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும்  இடம் பிடித்தனர். இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அஸிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன் 2வது இடம் பிடித்தார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுதொடர்பான தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர். 


இதேபோல் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு ஷிவின் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மற்ற திருநங்கைகளுக்கும், பெண்களுக்கும் உற்சாகமளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சரியாக வாக்கு விழவில்லை என சொல்லிய கமல்ஹாசன், 3 ஆம் பிடித்ததாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


நல்லவங்களுக்கே காலம் இல்ல போல 






இதனிடையே பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை காஜல் பசுபதி, அஸிம் வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எங்கையுமே நல்லவங்களா உண்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் நிரூபிக்கும் சமூகம்” என தெரிவித்துள்ளார்.