இந்தியா கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. அதில் இஷான் கிஷன் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றனர். 


இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக இஷான் கிஷான் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஆனால் களத்திற்கு வெளியே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு முன்னாள் கேப்டனும் அணியின் ஆலோசகருமான மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி அளித்து வந்தார். அவர் ரிஷப் பண்டிற்கு பந்துகளை போட்டு பிடிக்கும் பயிற்சியை கொடுத்து வந்தார். அதன்பின்னர் அவருக்கு கீப்பிங் நுணுக்கங்களை கற்றுத்தந்தார். 






இது தொடர்பாக படத்தை தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தை பார்த்து ரிஷப் பண்டிற்கு மென்டர் தோனி அளிக்கும் பயிற்சி என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக இன்றைய போட்டிக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோர் ஆலோசனை செய்யும் படத்தை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்தப் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


 






தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:மைதானத்தை தாண்டிய பந்து... டி-20 உலகக்கோப்பையில் அசத்தி வரும் கத்துக்குட்டி அணி!