பன்னிரெண்டு வயதில் சிறுவர்கள் வீடியோ கேமில் பிஸியாக இருக்கும் காலத்தில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த சிறுமி ரெபெக்கா டவுனி என்ன செய்தார் தெரியுமா?  டி20 உலகக் கோப்பைக்கான தனது நாட்டு கிரிக்கெட் அணியின் ஆடையை வடிவமைத்துள்ளார். ஸ்காட்லாந்து நாட்டு கிரிக்கெட் அணிக்கான சீருடையை வடிவமைக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பள்ளிச் சிறுவர்களிடையே போட்டி நடத்தியது. நடத்தப்பட்ட போட்டியில் சுமார் 200 சிறுவர்கள் பங்கெடுத்தனர். அதில் 12 வயது ரெபெக்காவும் ஒருவர். அவர் வரைந்த சீருடையைதான் தற்போது டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க சென்றிருக்கும் அந்த நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணி அணிந்து சென்றுள்ளது.











ரெபெக்கா வடிவமைத்த ஆடையைத் தேர்வு செய்தது குறித்து கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.  ஸ்காட்லாந்து நாட்டின் சின்னமான திசல் எனப்படும் ஒருவகை ஊதா நிறப்பூவை மையமாக வைத்து இந்த டிஷர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.