ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் பட்டியல்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.


இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதனை அடுத்து மார்ச் 7 ஆம் தேதி நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. அந்தவகையில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிகரமாக தொடரை முடித்தது.


முதல் இடத்தில் அஸ்வின்:






இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தை பிடித்துள்ளார். அந்தவகையில் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்அதன் அடிப்படையில் தான் இரண்டாவது இடத்தில் இருந்த அஸ்வின் 870 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.


அந்தவகையில் ஆறாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல்  இடத்தை அலங்கரித்துள்ளார் அஸ்வின். அதேபோல், 847 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசில்வுட் இரண்டு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி வீரர் பும்ரா 1 இடம் சரிந்து 847 புள்ளிகளுடன் ஷேசில்வுட் உடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!