டி20 உலககோப்பை தொடருக்கான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டத்தில் குரூப் ஏ ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அபுதாபி மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பென் கூப்பர் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் லீடியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக் டவுடுடன் பார்ட்னர்ஷிபந் அமைக்க எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டென் டாஸ்செத், ஸ்காட் எட்வர்ட்ஸ், வான் டெர் மெர்வ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து கர்டிஸ் காம்பெர் பந்தில் ஆட்டமிழந்தனர்.
மேலும் படிக்க : Biggboss Tamil 5 | மொத்த டாஸ்க்கையும் ஒழிச்சு விட்டீங்க.. நீங்கதான் க்ரூப்பு சேக்குறீங்க... இமான் மீது பாய்ந்த அபிஷேக்
இதன்மூலம் நடப்ப உலககோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை கர்டிஸ் காம்பெர் படைத்தார். 51 விக்கெட்டுகளுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த பிறகு,தொடக்க வீரர் மேக்ஸ் டவுடுடன், கேப்டன் சீலர் இணைந்து அணியை மீட்க முயற்சித்தனர். ஆனால், அரைசதம் அடித்த தொடக்க வீரர் மார்க் அடெய்ர் பந்தில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சீலர் 21 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்டிஸ் கம்பெர் 4 விக்கெட்டுகளையும், மார்க் அடெய்ர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் அனுபவ வீரர் கெவின் ஓ பிரையன் 9 ரன்களிலும், கேப்டன் பால்பிரின் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங்கும், கரத் டெலனியும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கரேத் டெலனி 29 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸர்கள் அடித்த நிலையில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 15.1 ஓவர்களில் 107 ரன்களை அடித்து அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அயர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளது.
குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவுகளில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்