சமூக வலைதளங்களில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக இந்த வீடியோவை ஒரு பிரபலம் ஒருவர் பதிவிட்டால் அது மிகவும் விரைவாக வைரலாகிவிடும். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவன் அசத்தலாக தெருவில் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாக சுழற்பந்து வீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துவந்தனர். அதன்பின்னர் இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


அந்தப் பதிவில்,"இந்த வீடியோ என்னுடைய நண்பர் மூலமாக எனக்கு கிடைத்தது. இந்த வீடியோவில் அந்தச் சிறுவனிற்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது உள்ள காதலும் அர்பணிப்பும் நன்றாக தெரிகிறது. இந்தச் சிறுவன் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறான்" எனப் பதிவிட்டிருந்தார். சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டிருந்த வீடியோவை தற்போது வரை 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 


 






மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர். அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரேட் லீ,"இந்த சிறுவன் மிகச் சிறப்பாக விளையாடும் திறமை கொண்டவன்" எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான், "இதற்கு பெயர் தான் திறமை" என்பதை குறிக்கும் வகையில் ஒரு பதிவை செய்துள்ளார். 




இவர்கள் தவிர பாலிவுட் நட்சத்திரமான ரன்வீர் சிங்கும் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், "திறமையில் நான் வியந்துள்ளேன்" என்பது போல் ஒரு பதிவை செய்துள்ளார். இதுபோன்று பல பிரபங்களும் இந்தச் சிறுவனின் வீடியோவை பார்த்து வியந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் இந்தச் சிறுவன் யார்? என்று கேட்டும் பதிவுகளை செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க: T20 WC Ind vs Eng: நம்புங்க... இன்று இந்தியா-இங்கி., டி20 போட்டி... பயிற்சி ஆட்டம் தான் ஆனாலும் Live இருக்கு!