விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக்பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனை இன்று பதிவு செய்ய உள்ளது.
இந்நிலையில், 15-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. இதில், இந்த வார தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் எல்லாவித உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி போட்டியை வெல்ல வேண்டும் என பிக் பாஸ் ஒரு டாஸ்க் நடத்துகிறார். ராஜூவும், இசையும் இதற்கு போட்டியிடுவதாக தெரிகிறது. சக போட்டியாளர்கள் அவர்களை சிரிக்க, அழ வைக்க முயற்சி செய்கின்றனர். அப்போது இசையைப் பார்த்து, “சட்ட வாங்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்ட” என ஒரு போட்டியாளர் கேட்க, இதுபோன்ற தனிநபர் பிரச்சனைகளை சொல்லி சீண்டக்கூடாது என இமான் அண்ணாச்சி கண்டிக்கிறார். போட்டியாளர்களின் கமெண்ட்ஸ்களை கேட்டு எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டி கொள்ளாமல் நிற்கிறார் இசை. ஏற்கனவே, இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் பதிவு நடைபெறுவதாக வந்து காணொளியை அடுத்து, இப்போது பிக் பாஸ் வீட்டில் மற்றுமொரு பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து இப்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் எதற்காக இப்படியெல்லாம் பேசுகிறாய் என இமான் கேட்க, “ஒட்டுமொத்த டாஸ்க்கையும் ஓச்சு விட்டீங்க. எதுக்காக ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்கன்னு அபிஷேக் எகிறுகிறார். உடனே இமான் புத்திசாலித்தனமாக பேசாதே எனச் சொல்ல, உடனே புத்திசாலின்னு எதுக்கு என்னை ஒதுக்குறீங்க” என்கிறார் அபிஷேக்.. என்னோட ஐக்யூ இருக்குறவங்க கிட்ட தான் நான் பேசுவேன் என எப்போதும் ஆணவத்தில் பேசும் அபிஷேக், இப்போது அந்த ஆணவப்பேச்சை விட்டதாகத் தெரியவில்லை. வெளியே போய் நான் பொழைச்சுக்குவேன். எனக்கு தெம்பு இருக்கு என்கிறார். சீக்கிரம் வெளியில் போவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் அபிஷேக்.