மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2011 இல் ஐசிசி கோப்பையை வென்ற தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரவிருக்கும் 2023 உலகக் கோப்பையின் லோகோவை ஐசிசி வெளியிட்டது.


2023 உலகக்கோப்பை


அனைவரும் எதிர்பார்க்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. எல்லா வகையான உணர்வுகளையும் கொண்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பெரும் ட்ராமாக்களை ரசிகர்களுக்காக வைத்து காத்திருக்கிறது. மிகவும் பெருமைக்குரிய கோப்பையான இதனை வெல்ல 12 நாடுகள் போட்டியிடுகின்றனர். கடைசியாக 2011இல் இந்திய அணி வென்ற இந்த பெருமைமிக்க தினத்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது. போட்டிக்கான கட்டமைப்பில் வெவ்வேறு உணர்வுகளின் அலைகளை ரசிகர்கள் அனுபவிப்பார்கள். இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, தயாராகும் போது அவரது அணி உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்று கூறுகிறார்.



வருடம் முழுவதும் கிரிக்கெட்


ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023க்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே உற்சாகம் கலை கட்ட துவங்கிவிட்டது. ஐபிஎல் ஃபீவர் சென்றுகொண்டிருப்பதால், முடிந்த உடனே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், அடுத்தது ஆசியக்கோப்பை என்று ரசிகர்களை இந்த வருடம் முழுவதும் கிரிக்கெட் கட்டுக்குள் வைத்திருக்கப்போகும் நிலையில், இறுதியாக எல்லாவற்றிற்கும் தலைமையாக உலகக்கோப்பை நடைபெற உள்ளது.


தொடர்புடைய செய்திகள்: MI vs RCB, IPL 2023 Live: முதல் போட்டியில் வெற்றி பெறுமா மும்பை; டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு..!


ரோகித் பேட்டி


இதுகுறித்து பேசிய ரோகித் ஷர்மா, "சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாகும், அதைவிட கேப்டன் என்ற முறையில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஈடுபடும் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும், மேலும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை எங்களால் முடிந்தவரை உருவாக்க அடுத்த சில மாதங்களில் நாங்கள் அனைத்தையும் செய்வோம்" என்று கூறினார்.



ஜெய் ஷா நம்பிக்கை


BCCI செயலாளர் ஜெய் ஷாவைப் பொறுத்தவரை, 2011 வெற்றியைக் குறிப்பிட்டு பேசுவதற்கு முக்கிய காரணம் அதன் பிறகு நாம் கோப்பையை வெல்லாததுதான் என்றார். இருப்பினும் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் நிகழ்வில் புதிய நினைவுகள் உருவாகும் என்று நம்புகிறோம் என்ற அவர், "2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவதற்கும், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வை உருவாக்குவதற்கும் பிசிசிஐ எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட்டைக் காண அக்டோபர் வரை காத்திருக்க முடியவில்லை. இதில் இந்தியா ஒரு நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று ஐசிசி மேற்கோள் காட்டியது.