நடப்பு ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து பெரிய அணிகளின் தோல்வியை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


பாகிஸ்தானை வீழ்த்தியது அயர்லாந்து:


கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் அயர்லாந்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இந்த வெற்றியியை அயர்லாந்து அணி மிகப்பெரிய அளவில் கொண்டாடியது. 


முன்னதாக இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணி.  இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி சாதனை படைத்தது.


வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய கென்யா:


கத்துக்குட்டி அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட கென்யா அணி கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது .


அதன்படி, முதலில் களமிறங்கிய கென்யா அணி 166 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இந்த போட்டியில் கென்யா பந்து வீச்சாளர்கள் கோர்ட்னி வால்ஷ் மற்றும் ரோஜர் ஹார்பர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து:


ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய அயர்லாந்து அணி நாங்கள் கத்துக்குட்டி அணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. 


அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அயர்லாந்து அணி


8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ருத்ர தாண்டவம் ஆடியது. 


இதில், அயர்லாந்து அணி வீரர் கெவின் ஓ பிரையன் சிறப்பான் ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதில், 63 பந்துகளில் 13 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்கள் குவித்தார்.இவ்வாறாக இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு வீழ்த்தியது அயர்லாந்து அணி.


இந்தியாவை தோற்கடித்த வங்கதேசம்:


கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தியது.  இந்த போட்டியில் இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது.  பின்னர், களமிறங்கிய வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தியது. அந்த நேரத்தில் இந்திய ரசிகர்கள் டெண்டுல்கரின் புகைப்படத்தை தீயிட்டு கொழுத்திய சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றது. இந்நிலையில், தான் நேற்று (அக்டோபர் 15) இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்தியா:


கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லாட்ர்ஸ்( Lord's)
மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை  வென்றது. அன்றைய காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரும் ஆளுமையாக விளங்கியது. 


அதுவரை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ஒன்பது ஆண்டுகளில் 17 வெற்றிகளை மட்டுமே பெற்ற இந்திய அணி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இந்திய அணி.


மேலும் படிக்க: Hashmatullah Shahidi: 'இந்த வெற்றி தொடக்கம்தான்..' பெருமையுடன் கர்ஜிக்கும் ஆப்கானிஸ்தான் கேப்டன்!


மேலும் படிக்க: AUS Vs SL, Innings Highlights: 'அட்டகாசத் தொடக்கம்.. அதிர்ச்சி முடிவு' பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை; ஆஸி.க்கு 210 ரன்கள் இலக்கு