விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் 14 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது. இதில் கடந்த இரண்டு போட்டிகளிலும் எதிர் அணியுடன் தோல்வி பெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.


முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க மற்றும்  குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். அதில், பாத்தும் நிஸ்ஸங்க 67 பந்துகளில்  8 பவுண்டரிகளுடன் மொத்தம் 61 ரன்கள் எடுத்தார். அதேபோல், குசல் பெரேரா  82 பந்துகளில் 12 பவுண்டரிகள் உட்பட 78 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக அவர்கள் பார்ட்னர்ஷிப் 125 ரன்கள் சேர்த்தனர்.


அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசிய 21 வது ஓவரின் 4 வது பந்தை பாத்தும் நிஸ்ஸங்க தூக்கி அடித்தார். அப்போது மைதனத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டேவிட் வார்னர் ஓடிச் சென்று டைவ் அடித்து அந்த கேட்ச்சை பிடித்தார்.


அதேபோல், குசல் மெண்டிஸ் கேட்சையும் வார்னர் பிடித்த  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.