ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆடவர் அணிக்கு சமமான பரிசுத்தொகையை மகளிர் அணிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை:
மகளிர் டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெறுபவர்களுக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இது 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பட்டத்தை வென்றபோது ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை விட 134 சதவீதம் அதிகமாகும் என்று ஐசிசி கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா , 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசைப் பெற்றது. முன்னதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 ஐசிசியின் முதல் நிகழ்வாக இருக்கும். இதில் பெண்கள் தங்கள் ஆடவர் அணியைப் போலவே பரிசுத் தொகையைப் பெறுவார்கள்.
இது விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்" என்று கூறியுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
மேலும் படிக்க: India vs Bangladesh:டெஸ்ட் கிரிக்கெட் - ஆதிக்கம் செலுத்தும் இந்தியா! திருப்பி அடிக்குமா வங்கதேசம்? இதுவரை எப்படி