இந்தியா - வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட்:
அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த போட்டி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிசிசிஐ மூத்த வீரர்களுக்கான ஒரு சிறப்பு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. அதன்படி, 5 நாட்களுக்கு முன்னதாகவே இந்திய அணியின் மூத்த வீரர்கள் சென்னைக்கு வந்து சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை நேருக்கு நேர் எத்தனை போட்டிகளில் விளையாடி உள்ளன என்பது தொடர்பான தகவலை பார்ப்போம்:
இந்தியா vs வங்கதேசம்: நேருக்கு நேர் 13 போட்டிகள்
இந்தியா வென்றது : 11
வங்கதேசம் வெற்றி : 0
டிராக்கள் : 2
வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த வீரர்:
சச்சின் டெண்டுல்கர் - 820 ரன்கள்
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் :
ஜாகீர் கான் - 31
இந்திய அணியின் அதிகபட்ச ரன்:
இந்தியா - 687/6 ஹைதராபாத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில்.
குறைந்த ரன்கள்:
2000 ஆம் ஆண்டில் டாக்காவில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் :
சச்சின் டெண்டுல்கர் - டாக்காவில் 248 நாட் அவுட், 2004
சிறந்த பந்துவீச்சு புள்ளிகள் (இன்னிங்ஸ்) :
7/87 – ஜாகீர் கான் டாக்காவில், 2010.
சிறந்த பந்துவீச்சு புள்ளிகள் (போட்டி) :
11/96 – இர்பான் பதான் டாக்காவில், 2004.
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
வங்கதேச டெஸ்ட் அணி:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் , ஷத்மான் இஸ்லாம் , மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் , நயீம் ஹசன், நஹித் ரனா, ஹசன் மஹ்முத் ரனா தஸ்கின் அகமது , சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்