Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) தன்னுடைய 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Continues below advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன் அஸ்வின்:

கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இல்லாதா அணி என்றால் அது இந்திய அணி மட்டும் தான். கிட்டத்தட்ட 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை உலக அரங்கிற்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது. அதில் முக்கியமானவர்கள் ஏரபள்ளி பிரசன்னா, பிசன் சிங் பேடி, அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அந்தவகையில் இன்று (செப்டம்பர் 17) தன்னுடைய 38வது பிறந்த நாளை கொண்டாடும்  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

Continues below advertisement

1986ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் ஆர்.அஷ்வின். இவரின் தந்தை பெயர் ரவிச்சந்திரன். இவர் கிளப் லெவல் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடியவர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட அஸ்வின், தனது 9 வயதிலேயே கிரிக்கெட் பயணத்தை தொடங்கிவிட்டார். இவர் ஒரு பேட்ஸ்மேனாக தான் விளையாட ஆரம்பித்தார். பின்பு சில பல காரணங்களால் சுழற்பந்து வீச்சாளராக அவதாரம் எடுக்கும், சூழலுக்கு தள்ளப்பட்டார்.

516 டெஸ்ட் விக்கெட்டுகள்:

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார்.அதன்பின், அபார பந்துவீச்சு திறனால் இந்திய அணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் அஸ்வின், அதிவேகமாக 50 விக்கெட், 100, 150, 200 விக்கெட்டுகள், 250, 300, 350 விக்கெட்டுகள், 400, 450, 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரராக இருக்கிறார். 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ளே முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 9 வது இடத்தில் இருக்கிறார். 

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் பத்து முறை மேன் ஆப் தி சீரியஸ் விருதை பெற்றுள்ளார். இதற்கு முன் முத்தையா முரளிதரன் 11 விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களும், 65 டி20 கிடிக்கெட் போட்டிகளில் 72 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 முறை 5 விக்கெட்களையும், 8 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். அதோடு ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இருக்கும் அஸ்வினுக்கு ஏபிபி நாடு சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

Continues below advertisement