டி20 தொடர்:


உலகக் கோப்பைக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 23) கேரள மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் தோல்விக்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக நேற்றைய போட்டி இருந்தது.


இதனிடையே, இந்த போட்டியில் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


 இச்சூழலில் தான் கடைசி  ஓவரில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 1 பந்திற்கு 1 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலில், இந்திய அணி வீரர் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தார். ஆனால், இந்த சிக்ஸர் நோபால் மூலம் கிடைத்ததால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று ஐசிசி அறிவித்தது. மேலும், நோபால் என்ற முறையில் 1 ரன் இந்திய அணிக்கு கிடைத்ததால் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.


தோனி சொன்ன அட்வைஸ்:


இந்நிலையில் ஐபிஎல் தொடர் விளையாடிய போது கடைசி ஓவரில் எந்தவொரு பதற்றமும் இன்றி இயல்பாக பேட்டிங் செய்யுமாறு எம்.எஸ்.தோனி கொடுத்த ஆலோசனை இப்போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்கு உதவியாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இது பற்றி ரிங்கு சிங் பேசுகையில், “ஒருமுறை மஹி பாயிடம் பேசிய நான் கடைசி ஓவரில் வெற்றிகரமாக சேசிங் செய்வதற்கு எந்த மாதிரியான எண்ணங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் முடிந்தளவுக்கு பதறாமல் அமைதியாக இருந்து பந்தை நேராக அடிப்பதே சரியாக இருக்கும் என்று  என்னிடம் தெரிவித்தார். 


இந்த போட்டியில் அவருடைய ஆலோசனையை பின்பற்றிய நான் கடைசி வரை அமைதியாக இருந்தேன். எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. அது எனக்கு உதவியாக இருந்தது” என்று கூறினார்.


முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அனைவரின் கவனத்தையும் ரிங்கு சிங் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சர்வதேச அளவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக களம் இறங்கி கடைசி நேரத்தில் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார்.


இந்நிலையில், தான்  எம்.எஸ்.தோனி போன்ற ஒரு ஃபினிஷர் இந்திய அணிக்கு கிடைத்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


மேலும் படிக்க: SANJU SAMSON: “மக்கள் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறார்கள்”- சஞ்சு சாம்சன் கடும் வேதனை!


 


மேலும் படிக்க: Rinku Singh: ரிங்குசிங்கின் இந்த அபார வளர்ச்சிக்கு காரணம் இவர்தான்! தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!