சூப்பர் ஃபினிஷிங்:
இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. இதில், நேற்று (நவம்பர் 23) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் அதிகபட்சமாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80 ரன்களும், இஷான் கிஷன் 50 ரன்களும் குவித்தனர். இதனிடையே, கடைசி நேரத்தில் விளையாடிய ரிங்கு சிங் கடைசி பந்தில் சிக்ஸருடன் 22* (14) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்
ஃபினிஷிங் சாட்:
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி வீரராக களத்தில் நின்று கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடித்த வீரர் ரிங்கு சிங். இவர் தற்போது இந்திய அணியிலும் விளையாடிவருகிறார். நேற்று அவர் அடித்த ஃபினிஷிங் சாட் அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்நிலையில் ரிங்கு சிங் இன்று இந்தளவுக்கு சிறப்பாக செயல்படுவதற்கு முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர் 2018 முதல் ஐபிஎல் தொடரில் கொடுத்த தொடர்ச்சியான ஆதரவு தான் காரணம் என்று இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இப்போட்டியில் ஃபினிஷிங் செய்த ரிங் சிங்கை களத்தில் வர்ணனையாளராக இருந்த அபிஷேக் நாயர் கட்டிப்பிடித்து பாராட்டினார். இந்நிலையில், இந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் இன்று (நவம்பர் 24) வெளியிட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள அந்ந பதவில், ”இது மிகவும் நிறைவான இதயத்தை வெளிப்படுத்தும் படங்களில் ஒன்றாகும். ரிங்கு சிங் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோரிடையே இருக்கும் பார்ட்னர்ஷிப் 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் என்னுடைய நேரத்தில் துவங்கியது. குறிப்பாக ரிங்குவிடம் நல்ல திறமை இருப்பதை பார்த்த அபிஷேக் நாயர் எப்போதும் அவரிடம், நீங்கள் ஏதோ ஸ்பெஷலாக செய்வதற்கு சிறிது நேரம் மட்டுமே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அலிகார் போன்ற சிறிய நகரிலிருந்து வந்த ரிங்கு பெரியதாக சிந்திப்பதை மட்டுமே தேவையாக கொண்டிருந்தார். அதில் வேலை செய்த அபிஷேக் நாயர் டெத் ஓவர்களில் அசத்தும் திறமையை ரிங்குவிடம் வளர்த்தார்.
மேலும் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூரிடம் கொல்கத்தா அணியில் ரிங்கு இருக்க வேண்டும் என்றும், அவர் பேசி சம்மதிக்க வைத்தார். ஐபிஎல் முடிந்து காயத்திலிருந்து குணமடைவதற்காக ரிங்கு பல நாட்கள் நாயர் வீட்டில் தங்கியுள்ளார். நாயர் மற்றும் கொல்கத்தா அணி ரிங்கு மேட்ச் வின்னிங் ஃபினிஷராக வரவேண்டும் என்பதை விரும்பினார்கள். இன்று நாயர் ஒரு பயிற்சியாளராக முன்னேறி ரிங்குவை இந்த உலகத்துடன் சேர்ந்து பார்க்கிறார். சிறப்பாக செயல்பட்டீர்கள் அபிஷேக் மற்றும் ரிங்கு” என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.